சட்டப்பேரவையா, சண்டை பேரவையா .? பிரேமலதா..
சட்டப்பேரவையில் பிரேமலதா இன்று பேசுகையில், “மானிய கோரிக்கையை தவிர மற்ற எல்லாம் நடக்கிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டையும்தான் சொல்கிறேன். இருவரும் மாறி மாறி குறை சொல்வதால்,இதனால் மக்களுக்கு என்ன பயன்?ஆண்ட கட்சிகள்
அவரவர்களால்முடிந்தஅளவுக்குநல்லதுதான்செய்துள்ளனர். தற்போது தவெகவுக்குமக்கள்வாய்ப்பளித்துள்ளனர். மக்களுக்கு நல்லதுநடக்கதான்சட்டப்பேரவைநடக்கிறது. இது மாதிரியான விஷயங்கள் கவலையளிக்கிறது” என்று கூறினார் அவர் செய்தியாளர்களிடம்பேசுகையில், “தம்பி ஆதவ் அர்ஜுனா, நீங்கள் எழுந்தால்தான் தான் சண்டையே ஆரம்பம் ஆகிறது. நீங்கள் 8-ஆம் தேதி வரை பேசவேண்டாம்எனஅவரிடம்நேரடியாகவேசொல்லிட்டேன். நேரம் வீணாகிறது.உங்களுக்கு தனிப்பட்ட கருந்து இருந்தால், பொதுக் கூட்டத்தில் பேசிக் கொள்ளுங்கள். சட்டப்பேரவையில் பேச வேண்டாம். ஆதவ் அர்ஜுனாவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டாம் என சபாநாயகரிடம் சொல்லியுள்ளேன். நான் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக பேசவில்லை.விவாதங்களை நான் ஆதரிக்கிறேன். ஆனால், தொடர்ந்து சண்டை போடுகிறார்கள். எம்எல்ஏக்கள் தங்களது கடமையை செய்ய வந்துள்ளோம். ஆனால், அதைப் பேச முடிவதில்லை. சட்டப்பேரவையில் மக்களின் பிரச்சினையை பேச வேண்டும். சட்டப்பேரவை என்பது சட்டப்பேரவையாக நடக்க வேண்டுமே தவிர, சண்டை மன்றமாக நடக்கக் கூடாது” என்று பிரேமலதாதெரிவித்தார்.