fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

மும்பையில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு பலத்த மழை..! வானிலை ஆய்வு மையம் வார்னிங்!

Mumbai heavy rain says MET department

மும்பை:

மும்பையில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மும்பையில் 46 ஆண்டுகள் கழித்து வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது . மழையுடன் சூறாவளி காற்றும் மணிக்கு 170 கிலோமீட்டர் வேகத்தில் வீசியதால் போக்குவரத்து வசதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந் நிலையில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறிய வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜெனரல் ஹோசிலியர் கூறியதாவது:

வழக்கமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் மும்பையில் பெய்யும் மழையின் அளவு 58.52 செ. மீ தான் இருக்கும். ஆனால் ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதி வரை மும்பையில் 59.76 செ. மீ மழை பெய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் தென்மேற்கு பருவமழை இன்று அல்லது நாளை தொடங்கி ஒரு வார காலத்திற்கு மும்மை மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோர மாவட்டங்களில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close