fbpx
Others

அப்பாவு–தமிழக சட்டப்பேரவை டிச. 9 ம் தேதி கூடுகிறது., சிறப்பு செய்தி.

  தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 9ம் தேதி கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இன்று சென்னை,தலைமைசெயலகத்தில்நிருபர்களிடம்கூறியதாவது:தமிழக சட்டமன்ற பேரவை கூட்டம் வருகிற டிசம்பர் மாதம் 9ம் தேதி காலை 9.30 மணிக்கு தலைமை செயலகவளாகத்தில்அமைந்துள்ளசட்டப்பேரவைமண்டபத்தில்கூட்டிஉள்ளேன்.பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து, அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு எடுக்கும்.அலுவல் ஆய்வு குழு கூடி, எத்தனை நாட்கள் கூட்டம் நடத்த வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டுமே தவிர, என் விருப்பத்துக்கு நான் 100 நாட்கள் கூட்டம் நடத்தப்போகிறேன் என்று சொல்ல முடியாது. அலுவல் ஆய்வு குழு கூட்டம் கூடி தான், சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்று சொல்ல வேண்டும். அந்த குழுவில், எல்லா கட்சி உறுப்பினர்களும் இருக்கிறார்கள்.சட்டமன்ற கூட்டத்தொடரை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இப்போதுள்ளமுதல்வர்மு.க.ஸ்டாலின்வந்தபிறகுதான்,நேரடிஒளிபரப்புஆரம்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் டிசம்பர் 9ம் தேதி (திங்கள்) கூடி வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close