fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

இன்று கரையை கடக்கும் நிசார்கா…! மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் மீட்புக்குழு தயார்!

Heavy alert in Maharashtra and Gujarat due to nisarga

டெல்லி:

நிசார்கா புயல் இன்று கரையை கடப்பதால் மகாராஷ்டிரா, குஜராத் மாநிங்கள் உஷார் நிலையில் உள்ளன.

மத்திய கிழக்கு அரபிக் கடலில் உருவான நிசார்கா தீவிர புயலாக மாறி  மும்பை அருகே இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 115 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். மகாராஷ்டிராவில் மும்பையும், கடலோர மாவட்டங்களும் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குஜராத்தை விட மகாராஷ்டிரா கடுமையாக பாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இரு மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

தேசிய பேரிடர் மீட்புப்படையினர், கடலோர காவல் படையினர் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close