fbpx
Others

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு…

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா,இ.ஆ.ப., அவர்கள் இன்று (4.3.2025) இராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றியம் வரகூர் ஊராட்சி கிராமத்தில் வனத்துறையின் மூலம் மரகத பூஞ்சோலை அமைக்கப்பட்டு உள்ளதை பார்வையிட்டார்கள். ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் சுமார் 2.4 ஏக்கர் பரப்பளவில் தடுப்பு வேலிகள், குடில்கள், நடைபாதைகள் அமைத்தும் மரச் செடிகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இவை நல்ல முறையில் உள்ளது எனவும் இதனை மேலும் சிறப்பாக அமைக்க தேவையான ஆலோசனைகள் நடவடிக்கைகள் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்கள். இவை பயன்பாட்டிற்கு வந்த பின்பு ஊராட்சி மன்றத்தில் ஒப்படைக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close