fbpx
Others

அதிமுகவை வீழ்த்தி ஆட்சி அமைக்க திமுக திட்டம்….

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலுக்கான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது. அதில்நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது.. எல்லோரும் பார்க்க வேண்டும்.. முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் பதிவு! | Important announcement will be made tomorrow says  Chief Minister MK ... அதிமுக தனது கூட்டணியைவலுப்படுத்தும்வகையில் பாஜகவை கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே இணைத்தது. அடுத்ததாக பாமக, அமமுக ஆகிய கட்சிகளையும் சேர்த்துள்ளது. அதே நேரம் ஆளுங்கட்சியான திமுக இன்னமும் கூட்டணி தொடர்பான முடிவைஅதிகாரப்பூர்வமாகஅறிவிக்காமல் உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் கூடுதல் தொகுதிகள் கேட்பது தான்.கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தற்போது 40 தொகுதிகள் வரை காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியானது கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் தற்போது 10 தொகுதிகளை தரவேண்டும் என நிர்பந்தம் செய்துள்ளது.இதேபோலகம்யூனிஸ்ட், மமக, மநீம உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் அதிக தொகுதிகளை எதிர்பார்க்கிறது. இந்த நிலையில் கடந்த முறை திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கட்சிகளோடு சேர்த்து புதிதாக இன்னும் 2 கட்சிகள் இணையவுள்ளது.தேமுதிக மற்றும் எஸ்டிபிஐ கட்சியும் திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டிய நிலை உள்ளதால் என்ன செய்வது என தெரியாமல் திமுகஉள்ளது. அதே நேரம் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் குறைந்தது 170 தொகுதிகளில் போட்டியிட திமுக திட்டமிட்டு வருகிறது. அதற்கு ஏற்ப கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளது. கடந்த முறை மதிமுக, தவாக, மமக உள்ளிட்டவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. எனவே இந்தமுறையும் திமுக சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தம் செய்யும் என கூறப்படுகிறது.ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக தனி சின்னமான தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது. எனவே இந்த முறை கட்சியின் அங்கீகாரத்தை பெற தனி சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் நேரடியாக 173 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து மொத்தம் 187 தொகுதிகளில் களம் இறங்கியது.எனவே இந்த முறையும் திமுக குறைந்தது 170 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிட்டால் மட்டுமே அதிமுகவை வீழ்த்தி ஆட்சி அமைக்க முடியும் என்பது திமுக தலைமையின் திட்டமாக உள்ளது. எனவே அதிமுக மற்றும் பாஜக பலம் குறைந்த தொகுதிகளின் பட்டியலை  திமுக எடுத்துள்ளது. எனவே கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கினாலும் கண்டிப்பாக திமுக 170தொகுதிகளுக்கு குறையாமல் இந்த முறை உதயசூரியன் சின்னத்தை களம் இறங்க திமுக திட்டமிட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close