fbpx
GeneralRETamil Newsஇந்தியா

சர்வதேச சுற்றுச்சூழல் தினம்…! பிரதமர் மோடி வாழ்த்து!

Modi tweet on World environment day

டெல்லி :

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர்  மோடி டுவிட்டர் பதிவை வெளியிட்டு உள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி சர்வதேச சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, பல்லுயிர்ப் பெருக்கம் என்ற பொருளை மையமாக கொண்டு உலக சுற்றுச் சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதை குறிப்பிட்டு, ட்விட்டரில் பிரதமர் மோடி ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

பூமியின் வளமான பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க உறுதியேற்போம். விலங்குகளும், தாவரங்களும் செழித்து வளர, நம்மால் இயன்ற அனைத்தையும் சேர்ந்து செய்வோம்.  அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த பூமியை நாம் விட்டுச் செல்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close