fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை..! அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

No school opening soon says minister sengottaiyan

சென்னை:

தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக மார்ச் மாதம் இறுதியிலிருந்து ஜூலை 31 ஊரடங்கு அமலில் உள்ளது. கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் திறக்கப்படாத நிலையில் வீட்டிலிருந்தே கல்வி கற்கவும், சந்தேங்களை கேட்கவும் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறி உள்ளதாவது: 3 நாட்களுக்குள் அட்டவணை வெளியிடப்படும். தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை.

14 தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் புத்தகங்கள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close