RETamil Newsஇந்தியா

இந்தியாவிலேயே ரேபிட் டெஸ்ட் கருவிகள் தயாரிக்கப்படும் – ஹர்ஷவர்தன்

உலகம் முழுவதும் பரவி உள்ள இந்த கொரோனா தொற்றால் பல நாடுகள் செய்வது அறியாது திகைத்து போய் உள்ளனர்.பல வளர்ந்த நாடுகளில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இந்தியாவிலும் இந்த வைரஸின் பாதிப்பு அதிகரிக்காமல் இருக்கும் வண்ணம் இந்த வைரஸ் பரவலை உடனே கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவிகளை பரிந்துரை செய்தது.

அதன் அடிப்படையில் சீனாவின் இரு நிறுவனங்களிடம் இருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகள் பெறப்பட்டன. ஆனால் சீனாவிடமிருந்து பெறப்பட்ட அந்த கருவிகள் தரமற்றவையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் , அவற்றை பயன்படுத்த வேண்டாம் எனவும், வாங்கிய நிறுவனங்களிடமே திருப்பி அனுப்பி விடுமாறும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்தது.

இந்நிலையில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில் , ” இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்த பிறகு ரேபிட் டெஸ்ட் கிட் தயாரிப்பு பணி தொடங்கும்.

மேலும் மே மாதத்தில் ஆர்டி பிசிஆர் சோதனை கருவிகளை மே மாதத்தில் நம்மால் தயார் செய்ய முடியும்.மே 31-ம் தேதிக்குள் ஒரு லட்சம் டெஸ்ட் கிட்களை நம்மால் தயார் செய்ய முடியும்.இந்தியாவில் கடந்த 7 நாட்களாக 80 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை’ என்றார்.

Related Articles

Back to top button
Close
Close