ராகுல் காந்தி தமிழகம் வருகை….
தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்குக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்றுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, தவெக கூட்டணியில் இணைந்தனர். தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விஸ்வநாதன், ராஜேஷ்குமார் ஆகிய இருவர் அமைச்சராகியுள்ளனர். விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொள்வதற்காக ராகுல் சென்னை வந்திருந்தார்.அதன் பிறகு விஜய் டெல்லி சென்றபோது காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இந்நிலையில் ஒரு நாள் பயணமாக ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார். மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் ராகுல் கலந்து கொள்கிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் காலை 10 மணிக்கு சென்னை வருகிறார். பிறகு சாலை மார்க்கமாக மாமல்லபுரம் செல்கிறார். இயக்கம் மறுசீரமைப்பு திட்டம் என்கிற பெயரில் ஜூலை 23 ஆம் தேதி முதல் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்களுக்கு, மாணிக்கம் தாகூர் தலைமையில் பயிற்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியை சீரமைத்து வளர்ப்பதற்காக இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இதன் நிறைவு விழா இன்று நடைபெறவுள்ளது. அதில் கலந்துகொள்ளும்ராகுல்காந்தி,மாலை4மணியளவில்காங்கிரஸ்மாவட்டதலைவர்களுடன்கலந்துரையாடவுள்ளார்.காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மட்டுமல்லாமல் அவர்களின் குடும்பத்தினரையும் ராகுல் காந்தி சந்தித்து பேசவுள்ளார். மேலும் நீட் தேர்வால் பாதித்து உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினரையும் ராகுல் சந்தித்து பேசவுள்ளார். இந்த சந்திப்பில் அவர் முதலமைச்சர் விஜயை சந்திக்க திட்டமில்லை என்று மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். இந்த திட்டங்களை முடித்துவிட்டு இரவுஅவர்டெல்லிதிரும்பவுள்ளார்.மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகஸ்ட் 1, 2026 அன்று தமிழ்நாடு வருகிறார். தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, அவர் இங்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும். ராகுல் காந்தியின் ஒரு நாள் பயணத் திட்டத்தின் முக்கிய விபரங்கள் பின்வருமாறு: 📍 முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பயணத் திட்டம் மாமல்லபுரம் காங்கிரஸ் பயிற்சி முகாம்: மாமல்லபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்களுக்காக நடைபெற்று வரும் ‘இயக்கம் மறுசீரமைப்புதிட்டம்’(சங்கதன்ஸ்ரீஜன்அபியான்)பயிற்சிமுகாமின்நிறைவுவிழாவில்ராகுல்காந்திபங்கேற்கிறார்.நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்: மாலை 4 மணியளவில் காங்கிரஸ்மாவட்டத்தலைவர்கள்மற்றும்அவர்தம்குடும்பத்தினரைச்சந்தித்துக்கலந்துரையாடுகிறார்.பாதிக்கப்பட்டகுடும்பங்களுக்கு ஆறுதல்: நீட் தேர்வினால் (NEET)மனமுடைந்து உயிரிழந்தமாணவர்களின்குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.பயண நேரம்: டெல்லியில் இருந்து விமானம் மூலம் காலை சென்னை வந்தடையும் அவர், சாலை மார்க்கமாக மாமல்லபுரம் செல்கிறார். நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இரவே மீண்டும் டெல்லி திரும்புகிறார்