முதல்வராகப் பணி மேம்பாடு பெற்றப் பேராசிரியர்களுக்கு பாராட்டு…
அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி), நந்தனம், சென்னை- 35 இல்பல்வேறு துறைகளில் துறைத்தலைவர்களாக, மூத்த பேராசிரியர்களாகப் பணியாற்றி முதல்வராகப் பணி மேம்பாடு பெற்றுச் செல்லுகின்ற பேராசிரியர்கள் அனைவருக்கும் கல்லூரி முதல்வர் முனைவர் திரு து.தங்கராஜன் அவர்கள் பாராட்டி அவர்களுக்கான ஆணையை வழங்கினார்.பணி மேம்பாடு பெற்றுள்ள காரணத்தினால் புதியதாக பொறுப்பு ஏற்றுள்ள துறை தலைவர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள துறை தலைவர்கள் அனைவரும் பங்கேற்று மேம்பாடு பெற்றுள்ள பேராசிரியர்களை மனமுவந்து வாழ்த்தினர். முதல்வரும் ஒவ்வொருவரின் சிறப்பினையும் கூறி அவர்கள் நிர்வாகப் பணிக்கு செல்லும் எதிர்காலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்தினார். முதல்வராக பணி மேம்பாடு பெற்றுள்ள பின்வரும் பேராசிரியர் அனைவரும் தங்கள் ஏற்புரையை வழங்கினர்.
முனைவர் வே.புகழேந்தி
முனைவர் கே. பி. கிரிவாசன்
முனைவர் என். லலிதா
முனைவர் எம்.மஜீதா பர்வீன்
முனைவர் டி. அபிராமி
முனைவர் கே. ஆர். பீர் முகமது
முனைவர் எ. சரஸ்வதி
முனைவர் பி. ஜெயராணி
முனைவர் எம். பாஸ்கர்
கல்லூரியின் துறைத் தலைவர்களாகவும் மற்றும் கல்லூரியின் வளர்ச்சியில் பல்வேறு குழு உறுப்பினர்களாகவும் ஆக்கமுடன் செயலாற்றிய இவர்களின் பணி மேம்பாட்டுக்குப் பிறகு அடுத்த அடுத்த நிலையில் உள்ள மூத்த பேராசிரியர்கள் பல்வேறு நிலைகளில் பணிகளைப் பகிர்ந்து கொண்டனர்.தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உயர்கல்விப் பணியில் செல்ல உள்ள இவர்கள் அனைவரையும் மனமுவந்து அனைவரும் வாழ்த்தினர்.
