fbpx
Others

மாரத்​தான் ஓட்​டத்தை முதல்​வர் விஜய் தொடங்கி வைத்​து ஓடினார்…

 முன்னதாக, விழிப்புணர்வு வாசகப் பலகையில் விளையாட்டை எடு Drug-யை விடு என எழுதி, கையெழுத்திட்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.சர்​வ​தேச போதைப் பொருள் ஒழிப்​பு, சட்​ட​விரோத கடத்​தல் தடுப்பு தினம் நேற்று கடைபிடிக்​கப்​பட்​டது. இதையொட்​டி, மாணவர்​கள், இளைஞர்​கள், பொது​மக்​களிடம் விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் வகை​யில் தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யம் சார்​பில் சென்​னை​யில் ‘ஸ்​டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்​ஸ்’ என்ற கருத்​துடன் நேற்று மாரத்​தான் ஓட்​டம் நடத்​தப்​பட்​.டது.நிகழ்ச்​சிக்கு தலைமை வகித்த முதல்​வர் விஜய், விழிப்​புணர்​வுப் பலகை​யில் ‘ஸ்​டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்​ஸ், ஸ்போர்ட்ஸை எடு, ட்ரக்ஸை விடு’ என்று எழுதி கையெழுத்​திட்​டார். அவரது தலை​மை​யில் அனை​வரும் போதைப் பொருள் எதிர்ப்பு உறு​தி​மொழி ஏற்​றுக்​கொண்​டனர். இதன்​பிறகு, மெரினா காம​ராஜர் சாலை​யில் உள்ள அண்ணா நினை​விடத்​தில் இருந்து தீவுத்​திடல் வரை மாரத்​தான் ஓட்​டம் தொடங்​கியது.முதல்​வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்​தார். 6 கி.மீ. தூரம் நடை​பெற்ற ஓட்​டத்​தில், ஒலிம்​பிக் மற்​றும் சர்​வ​தேசப் போட்​டிகளில் கலந்​து​கொண்ட விளை​யாட்டு வீரர்​கள், வீராங்​க​னை​கள், தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தின் விளை​யாட்டு வீரர்​கள், கல்​லூரி மாணவ, மாணவி​கள், அரசு அலு​வலர்​கள், காவல் துறை அதி​காரி​கள், பொது​மக்​கள் என 15 ஆயிரம் பேர் பங்​கேற்​றனர்.இவர்​களு​டன் முதல்வர் விஜய், அமைச்​சர்​கள் ஆனந்த், ஆதவ் அர்​ஜு​னா, வெங்​கடரமணன், மரிய​வில்சன், ரா.குமார், தலை​மைச் செயலர் சாய்​கு​மார், டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால், சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ், விளை​யாட்​டுத் துறை செயலர் சந்​தீப்நந்​தூரி, தமிழ்​நாடு விளை​யாட்டுமேம்​பாட்டு ஆணைய உறுப்​பினர் செயலர் மேக​நாத ரெட்​டி, மாநக​ராட்சி ஆணை​யர் சமீரன், மாவட்ட ஆட்​சி​யர் மாலதி ஹெலன் உள்​ளிட்​டோரும் மாரத்​தானில் பங்​கேற்று ஓடினர். பின்​னர், வீரர்​களு​டன் கலந்​துரை​யாடிய முதல்​வர் விஜய், அவர்​களு​டன் செல்ஃபி எடுத்​துக் கொண்​டார்.நிகழ்ச்​சி​யின் முடி​வில் பேசிய அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா, “தமிழக வரலாற்​றில் வேறு எந்த முதல்​வரும் மாரத்​தான் ஓடியது இல்​லை. முதல்​வர் விஜய்​தான் முதல்​முறை​யாக 3 கி.மீ. தூரம் வரை மாரத்​தான் ஓடி​யுள்​ளார். அவரைப் போலவே தமிழக​மும் ஆரோக்​கிய​மாக மாறும்” என்​றார்.முதல்​வர் விஜய் தனது சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: இதற்கிடையே, மாரத்தான் போட்டியில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றது குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், "இதுவரை இருந்த முதலமைச்சர்களிலேயே மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று 3 கி.மீ ஓடிய முதலமைச்சர் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே ஒரே முதலமைச்சர் ஜோசப் விஜய் தான்" என்று பெருமிதமாக கூறினார். இளைஞர்​களின் எதிர்​காலத்​தைப் பாது​காக்​க​வும், குற்​றங்​களைத் தடுக்​க​வும் போதைப் பொருட்​களால் ஏற்​படும் தீமை​கள் குறித்த விழிப்​புணர்வை ஏற்​படுத்​து​வது அவசி​யம். கல்​வி, விளை​யாட்​டு, திறன் மேம்​பாடு போன்ற ஆக்​கப்​பூர்​வ​மான செயல்​பாடு​களில் இளைஞர்​களை ஈடு​படுத்​து​வதன் மூல​மாக​வும், கடும் சட்ட நடவடிக்​கை கள் மூல​மாக​வும் போதைப் பொருட்​களை ஒழித்​து, வலிமை​யான சமு​தா​யத்​தைப் படைக்க முடி​யும்.போதைப் பொருட்​கள் தொடர்​பான குற்​றங்​களைத் தடுக்க தமிழக அரசு எடுத்​து​வரும் பல்​வேறு முன்​னெடுப்​பு​களுக்கு அனை​வரும் துணைநின்​று, போதைப் பொருள் இல்​லாத, பாது​காப்​பான, ஆரோக்​கிய​மான தமிழகத்​தை உரு​வாக்​க உறு​தி​யேற்​போம்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​துள்​ளார்​.

Related Articles

Back to top button
Close
Close