அதிமுக – பாஜக கூட்டணியில் இணைய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…!
அதிமுக – பாஜக கூட்டணியில் இணைய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் அன்புமணி தரப்பில் 30 தொகுதிகள் டிமாண்ட் வைத்திருப்பதாகவும், அதனை பாஜக நிர்வாகி வைஜயந்த் பாண்டாவிடம்அழுத்தமாககூறியதாகவும்தெரிகிறது.தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. திமுக கூட்டணியை பொறுத்தவரை அத்தனை கட்சிகளும் இணக்கமாக இருக்கும் நிலையில், இன்னும் சில கட்சிகள் அந்த கூட்டணியில் இணையும் என்று தெரிகிறது. அதேபோல் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் இன்னும் சில கட்சிகளை இணைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.ஏற்கனவே பாஜகவுடன் தமாகா, பாமக உள்ளிட்ட கட்சிகள் நெருக்கம் காட்டி வருகின்றன. இதில் பாமக இரு பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. பாமகவின் தலைவர் தாம்தான்என்றுராமதாஸ்தொடர்ச்சியாக பேசுவதோடு, செயல்பட்டும் வருகிறார். மறுபக்கம் அன்புமணி பல்வேறு கூட்டங்களையும், நிர்வாகிகளையும் நியமித்து அடுத்தக் கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை அதிமுக நேரடியாக தொடங்காமல், பாஜக மூலமாக மேற்கொண்டு வருகிறது. தமிழக பாஜக பொறுப்பாளரான வைஜந்த் பாண்டாபாமகதலைவர்அன்புமணியை சென்னையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கினார். அன்புமணியுடன் பேசிய அடுத்த நாளிலேயே ராமதாஸையும் இவர் சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பின் போது இரு தரப்புமே அதிமுக – பாஜக கூட்டணிக்கு ஒப்புதல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ராமதாஸ் கொஞ்சம் நாட்கள் செல்லட்டும் என்று கூறியதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.இதனிடையே பாமக தலைவர் அன்புமணி முதற்கட்ட பேச்சுவார்த்தையின் போதே அதிமுக – பாஜக கூட்டணிக்கு வருவதற்கு தயார் என்று தெரிவித்திருக்கிறார்.