fbpx
ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

ஊரடங்கை மீறியதாக 5 லட்சம் வழக்குகள்…! 8 கோடி ரூபாய் வருவாய்…!

In Lockdown period tamilnau police collects 8 crore fine

சென்னை:

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 8 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 24 மணி நேரத்தில் மட்டும் 4543 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறியதாக 4,20,688 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

24 மணி நேரத்தில் 2351 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதுவரை 4,94,770 வழக்குகளும், ரூ.7,63,04,184  பதிவு செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் மட்டும் 4369 வழக்குகளும், ரூ.2,14,5300 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

வாகன உரிமையாளர்கள் தினசரி காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒரு முறை 10 நபர்களுக்கு என்ற முறையில் வாகனங்கள் திருப்பி தரப்படுகிறது.

கடந்த 24ம் தேதி முதல் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட வரிசை படி உரிமையாளர்களுக்கு வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. வாகனம் பெற வரும்போது எப்ஐஆர் நகல், ஓட்டுனர் உரிமம் அசல் மற்றும் நகல், வாகனத்தின் ஆர்சி புத்தகம் அசல் மற்றும் நகல் கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close