fbpx
Others

டில்லி சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் சோனம் வாங்சுக் அனுமதி

Latest Tamil Newsநீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி, டில்லி ஜந்தர் மந்தரில், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து 21 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த அவரை, டில்லி போலீசார் நேற்று டில்லி சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரது உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.இதனிடையே, வாங்சுக் சட்டவிரோதமாக மருத்துவமனையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறி, அவரது மனைவி கீதாஞ்சலி, டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்தரப்பில்மூத்தவழக்கறிஞர்கபில்சிபலும்,மத்தியஅரசுதரப்பில்கூடுதல்சொலிசிட்டர்ஜெனரல்சேத்தன்சர்மாவும்ஆஜராகினர்.அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபில், ‘சப்தர்ஜங் மருத்துவமனையில் வாங்சுக்கிற்கு அவரது சொந்த மருத்துவர்களையோ அல்லது வழக்கறிஞர்களையோ சந்திக்கும் வசதி இல்லை. அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க அனுமதிக்க வேண்டும்,’ என வாதிட்டார்.அரசு தரப்பு வழக்கறிஞர் சேத்தன் சர்மா வாதிட்டதாவது; ஜூலை 16ம் தேதி பிறப்பிக்கப்பட்ட டிவிஷன் பெஞ்ச் உத்தரவின்படி, சோனம் வாங்சுக்கின் உடல்நிலை அரசு மருத்துவர்களால் தினமும்Legal Eagle Elite கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.அவருக்குஅளிக்கப்பட்டுவரும்சிகிச்சைகள்குறித்தவழக்கமானமருத்துவஅறிக்கைகளும்வெளியிடப்பட்டுவருகின்றன.வாங்சுக் சிகிச்சையை மறுத்தாலும், தேவைப்பட்டால் மருத்துவர்கள் நியாயமான மருத்துவத் தலையீடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனையும் போல வாங்சுக்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும். ஜனாதிபதிக்கே எய்ம்ஸ்மருத்துவமனையில்தான்சிகிச்சைஅளிக்கப்படுகிறது.வாங்சுக்எலக்ட்ரோலைட்டுகளை எடுத்துக்கொள்ள ஒப்புக்கொண்டார். மருத்துவமனையில் வாங்சுக்கின் மனைவியும், சகோதரரும்அவரைச்சந்திக்க24மணிநேரமும்அனுமதிவழங்கப்பட்டுள்ளது.மேலும்அவர்கள்தங்குவதற்குதனிஅறையும்தரப்பட்டுள்ளது,இவ்வாறுதெரிவிக்கப்பட்டது.வாதங்களை கேட்ட டில்லிஉயர்நீதிமன்றம்,சோனம்வாங்சுக்காவலில்வைக்கப்படவில்லை.அவரதுஉடல்நிலைமோசமாகஇருந்தபோதிலும்,அவர்தாமாகமுன்வந்துமருத்துவசிகிச்சைஎடுத்துக்கொள்ளமுன்வராததால்,அவரைஅரசுமருத்துவமனையில்கொண்டுசேர்க்கஅரசுக்குமுழுஉரிமைஉண்டு.தனியார்மருத்துவமனைக்கு மாற்றக் கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு, உடனடியாக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது.இது தொடர்பாக அரசு, போலீசார் மற்றும் மருத்துவமனை நிர்வாகமும், 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்படுகிறது, இவ்வாறு கூறப்பட்டது. மேலும், இந்த வழக்கை ஜூலை 23ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close