RETamil Newsதமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – சென்னையில் ஒருவர் உயிரிழப்பு

இந்தியா முழுவதும் பரவ தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் இன்று தமிழகம் முழுவது பரவி உள்ள இந்த கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் அதிகரித்து கொண்டே வருகிறது.

தமிழகத்தில் உள்ள கொரோனா பாதிப்பு குறித்த தவல்களை நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது;

தமிழகத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 66 பேர் கொரோனா வைரசால் பாதிப்படைந்துள்ளனர்.இவர்களில் சென்னையில் 43 பேர், காஞ்சிபுரத்தில் 7 பேர், தென்காசியில் 7 பேர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர், செங்கல்பட்டு, விழுப்புரம்,திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் தலா ஒருவர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் 1821 பேர் பாதிக்கப்பட்டுஉள்ளனர். தமிழகத்தில் உள்ள கொரோனா பரிசோதனை மையங்கலின் எண்ணிக்கை 41-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இனிமேல் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை மாதிரிகளை பரிசோதனை செய்ய முடியும்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 94 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர்.தமிழகத்தில் மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 52 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதை மத்திய குழு பாராட்டியுள்ளது. பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்து ‘ டிஸ்சார்ஜ்’ செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் , சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த 34 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார் அவரது வயது 34 என்பதால் , அவருக்கு கொரோனா தொற்று இருந்திருக்குமோ என்ற கோணத்தில் அவரது உடன் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று மட்டும் 94 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். அதில் சென்னையின் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள 6 மருத்துவ முதுகலை பட்டமேற்படிப்பு டாக்டரும் , ஒரு செவிலியரும் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் பிளாஸ்மா பரிசோதனை செய்ய இரத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதே போல் கோவையில் 2 மருத்துவ முதுகலை பட்டமேற்படிப்பு டாக்டரும் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் பரவி வருவதால் இதை கட்டுக்குள் கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 1.5 கோடி மக்கள் தொகையை கொண்டுள்ளது. இது மிகப்பிரிய மக்கள் தொகையாகும்.கொரோனா தொற்று நோயானது எளிதில் மற்றவர்களுக்கு பரவக்கூடியதாக இருப்பதாலும்,மிகப்பெரிய மக்கள்தொகையை கொண்டிருப்பதாலும் சென்னையில் இந்த தொற்றை கட்டுப்படுத்துவது அனைவருக்கும் ஒரு சவாலாக உள்ளது.

இந்த தொற்று நோயானது நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்களுக்கு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு கஷாயம் இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

தற்போது தமிழகத்தில் கபாசுர குடிநீரில் போலி வந்துவிடக்கூடாது என குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த கபசுர குடிநீரை தயாரிக்க ரூ.3 கோடி தமிழக அரசு ஒதிக்கீடு செய்துள்ளது.

இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close