Others

பாரத ரத்னா எல்.கே. அத்வானி-நூற்றாண்டு நாயகர்…பிரதமர் நரேந்திர மோடி.

பாஜக மூத்த தலைவர் அத்வானியின் உடல்நிலையில் முன்னேற்றம், இந்தியா செய்திகள் -  தமிழ் முரசு India News in Tamil, Tamil Murasuஎல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது1947-ம் ஆண்டு,நவம்​பர் 8-ம் தேதி தேவ் தீபாவளி நன்​னாளில் பிறந்​தார்.தனது இளம் வயதில், சிந்​து​வில் தனக்​குப் பழக்​க​மான வாழ்​விடத்​தையும் சூழலை​யும் விட்​டுப் பிரிய வேண்​டிய வேதனையை அவர் அனுபவித்​தார்.இருப்​பினும், எவ்​விதக் கசப்​புணர்​வும் இன்றி, பூஜ்ஜியத்​தி​லிருந்து தனது வாழ்க்​கையை மீண்​டும் கட்​டமைத்​துக் கொண்​டார். எத்​தகைய சவால்​களை​யும் எதிர்​கொண்டு, அடிப்​படை​யி​லிருந்து ஒன்றை உரு​வாக்​கும் இந்​தப் பண்பு, அவரது வாழ்​நாள் முழு​வதும் தொடர்ந்து வெளிப்​பட்டு வந்​துள்​ளது.​ ஜனசங்​கத்தை வலுப்​படுத்​தி​யபோதும், பின்​னர் பாரதிய ஜனதா கட்​சியை உரு​வாக்கி வளர்த்​த​போதும் இந்​தப் பண்பு வெளிப்​பட்​டது. அத்​வானியை ஒரு தனித்​து​வ​மான தலை​வ​ராக, எப்​போதும் இரண்டு பண்​பு​கள் அடை​யாளப்​படுத்து​கின்​றன.முதலா​வது, அவரது கொள்​கைத் தெளிவும், அறி​வுக்​கூர்​மையும். அவரது உரைகளி​லும் எழுத்​துகளி​லும் இப்​பண்​பு​கள் வெளிப்​பட்​டன. 2-வது, இந்​திய அரசி​யல் களத்​தின் பெரும்​பான்​மையான பிரி​வின​ரால் பல ஆண்​டுகளாக முன்​னெடுக்​கப்​பட்ட போலி மதச்​சார்​பின்​மையை அவர் அம்​பலப்​படுத்​திய விதம்.அத்​வானி தனக்கு ஒப்​படைக்​கப்​பட்ட ஒவ்​வொரு பொறுப்​பையும் மிகுந்த அர்ப்​பணிப்​புடனும் கவனத்​துடனும் நிறைவேற்​றினார். ஆர்​எஸ்எஸ் தொண்​டராகத் தனது பணி​யைத் தொடங்​கிய அவர், முதலில் ராஜஸ்தானின் பல்​வேறு பகுதி​களில் பணி​யாற்​றினார்.அங்​கிருந்து தலைநகர் டெல்​லிக்​குச் சென்ற அவர், வாஜ்பாயுடன் இணைந்து நெருக்​க​மாகப் பணி​யாற்​றத் தொடங்​கினார். இரு​வரும் இணைந்து இந்​திய அரசி​யலின் போக்​கையே மாற்​றியமைத்​தனர்.அத்​வானி​யின் நாடாளு​மன்​றப் பயணம் 1970-ம் ஆண்​டில் தொடங்​கியது. நாடாளு​மன்ற உறுப்​பின​ராகவும், பின்​னர் மக்​களவை, மாநிலங்​களவை ஆகிய இரு அவை​களி​லும் எதிர்க்​கட்​சித் தலை​வ​ராகவும், ஆளுங்​கட்சி உறுப்​பின​ராகவும் அவர் தனித்​து​வ​மான வெங்கையா நாயுடு எழுதுகிறார்: எல்.கே. அத்வானி, அதிகாரத்தின் மீது ஆசைப்படாத  தலைவர் - சிவில் டெய்லிமுத்​திரையைப் பதித்​தார்.அவசரநிலைக் காலம், அத்​வானி வாழ்க்​கை​யில் ஒரு முக்​கியத் திருப்​புமுனையாக அமைந்​தது. ஜனநாயகத்​தைக் காப்​ப​திலும், அரசி​யலமைப்​புச் சட்​டத்​தைப் பாது​காப்​ப​திலும் அவர் முன்​னிலை வகித்​தார்.அவசரநிலைக் காலத்​தில் அவர் பெற்ற அனுபவங்​கள், ‘ஒரு கைதி​யின் குறிப்​பேடு’ என்ற அவரது நூலில் இடம்பெற்றன.1977-ல் ஜனதா அரசு ஆட்​சிப் பொறுப்​பேற்​றபோது, அத்​வானி தகவல் மற்​றும் ஒலிபரப்​புத்​துறை அமைச்​சராகப் பொறுப்​பேற்​றார். இத்​துறை​யில் அவர் ஆற்​றிய பணிகள் மிகுந்த தாக்​கத்தை ஏற்​படுத்​தின.துணைப் பிரதம​ராகவும், நீண்​டகாலம் உள்​துறை அமைச்சராகப் பணி​யாற்​றிய​வர்​களில் ஒரு​வ​ராகவும், நாட்​டின் பாது​காப்​புக் கட்​டமைப்பை வலுப்​படுத்​து​வதில் அவர் முக்​கியப் பங்​காற்​றினார்.அத்​வானி​யின் வாழ்க்​கை​யில் வரலாற்​றுச் சிறப்​புமிக்க நிகழ்​வு​களில் ஒன்று, சோம​நாதர் ஆலயத்​தி​லிருந்து அயோத்தி வரை நடை​பெற்ற ரத யாத்​திரையாகும்.இது, இந்​தி​யச் சமூகத்​தின் போக்​கில் நேர்​மறை​யான மாற்​றத்தை ஏற்​படுத்​தி​யது. பல ஆண்​டுகளுக்​குப் பின், இந்​திய மக்​களின் ஆசி​யு டன், பகவான்  ராமருக்​கான பிரம்​மாண்​ட​மான ஆலயம் எழுப்​பப்​பட்​டது.அத்​வானியை கவுர​விக்​கும் வகை​யில், 2024-ம் ஆண்டு இந்​திய மக்​களின் சார்​பாக அவருக்கு நாட்​டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்​கப்​பட்​டது.அத்​வானி தனது நூறாவது வயதில் அடி​யெடுத்து வைக்​கும் இந்த சிறப்​பான தருணத்​தில், அவர் நல்ல உடல்​நலத்​துடன் நீண்​டகாலம் நீடுழி வாழவும், எப்​போதும் போல நம் அனைவருக்​கும் தொடர்ந்து ஊக்​கமளிக்​கவும் இறைவன் அவருக்கு அருள்​புரிய வேண்​டும் என்று பிரார்த்​திக்​கிறேன்.– பிரதமர் நரேந்திர மோடி

Related Articles

Back to top button
Close
Close