எந்தநேரமும் ஆதவ் அர்ஜுனா கைதாக வாய்ப்பு….?
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி நடந்த தவெக தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியாவையே ஆடிப்போக வைத்துள்ளளது இந்த சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் சிடி நிர்மல்குமார் மற்றும் பலர் மீது கரூர் டவுன் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். புஸ்ஸி ஆனந்த்தையும் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.இந்த சூழலில தவெக துணைப்பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா நேற்று நள்ளிரவில் வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அந்தப் பதிவில், “இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி. எப்படி இலங்கையிலும், நேபாளத்திலும் இளைஞர்களும், genz தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கானஅடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்!” என்று கூறியிருந்தார்.அந்த பதவினை உடனே அவர் டெலிட் செய்துவிட்டார். எனினும் அதனை ஸ்கிரீட் ஷாட் எடுத்து வைத்திருந்த திமுகவினர், ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா மீது ஐந்து பிரிவின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.அதன்படி, பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டப்பிரிவு 192, கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டல், பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரவு 196 (1) வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகையை வளரக்கும் அல்லது நல்லிணக்கத்தை பாதிக்கும் செயல்கள், பிஎன்எஸ் சட்டப்பிரிவு197(1)d)இந்தியஇறையாண்மை ஒற்றுமை அல்லது பாதுகாப்புக்கு தீங்கு விளைவித்தல், 353 (1) (b) பொதுமக்களுக்கு தீங்கு விளைக்கும் அறிக்கைகள், தவறான தகவல்கள், வதந்தி வெளியிடுவது, 353 (2) பொது தீமைக்குவழிவகுக்கும்..உள்ளிட்டஐந்துபிரிவுகளின்கீழ்வழக்குபதிவுசெய்யப்பட்டுள்ளது.இந்திய இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு அல்லது பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொய்யான அல்லது தவறாக வழிநடத்தும் தகவலை உருவாக்குதல் அல்லது வெளியிடுதல் போன்ற குற்றங்களுக்கு தண்டனை அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இந்த பிரிவில் தான் ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாரண்ட் இல்லாமல் காவல் துறையினர் கைது செய்ய முடியும். ஜாமீன் பெற முடியாது. நீதிமன்றத்தில் முறையிட்டுத்தான் தீர்வு பெற முடியும். எனவே ஆதவ் அர்ஜுனா எந்தநேரமும் கைதாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.