த.வெ.க. கட்சி நிர்வாகிகள் அதிருப்தி….
விஜய் முதல்வராக வேண்டும் என்று அவரது ரசிகர் மன்றத்தில் இருந்தே பல்வேறு நலத்திட்ட பணிகளை எந்த எதிர்பார்ப்பும் இன்றி ரசிகர்கள் செய்து வந்தனர். , கட்சியாக முதல் தேர்தலிலேயே 234 தொகுதிகளிலும் அவர்களை நம்பி தனித்து போட்டியிட்டு முதல்வராக விஜய்பொறுப்பேற்றார்.ஆதவ்அர்ஜூனா,செங்கோட்டையன், நிர்மல்குமார் தவிர அமைச்சர்களாக தன் ரசிகர்களையே விஜய் நியமித்தார்.’தமிழக அரசியலில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வந்துள்ள கட்சி த.வெ.க.,’ என்று பெருமை பேசிய நிலையில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்கள், அமைப்புச் செயலாளர்களை த.வெ.க.,வில் தொடர்ந்து சேர்த்து வருகின்றனர். ‘அ.தி.மு.க.,வில் இருப்பவர்கள் எல்லாம் இங்கே வந்துவிட்டதால் இதுதான் உண்மையான அ.தி.மு.க.,’ என்று ஆதவ் அர்ஜூனா பேசியதை த.வெ.க.,வினர் ரசிக்கவில்லை.அதேசமயம் ரசிகர் மன்றத்தில் இருந்தே குடும்பத்தை மறந்து விஜய்க்காக உழைத்து வரும் தங்களை புறக்கணித்துவிட்டு அ.தி.மு.க.,வில்இருந்துவந்தவர்களுக்கும்,அந்தகட்சிஆதரவாளர்களுக்கும் மட்டும் தொடர்ந்து அரசு சார்ந்த கவுரவ பதவிகள் தருவது முதல்வர் விஜய்க்கு தெரியுமா என த.வெ.க., நிர்வாகிகள் கொந்தளிப்பில்உள்ளனர்.அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரான கு.ப. கிருஷ்ணன், தேர்தலில் தோல்வியை தழுவியபோதும் அமைச்சர் அந்தஸ்திலான தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் பதவியை விஜய் வழங்கினார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நேற்றுமுன்தினம் நியமிக்கப்பட்டார். இவர் அ.தி.மு.க.,வுக்காக பிரசார பாடல் பாடியவர். இவரது மனைவி அனிதாபிரசாரமேசெய்தவர்.அ.தி.மு.க.,வில்இருந்துவந்தசிங்கைராமச்சந்திரனுக்குஉடனடியாக’ஸ்டார்ட்அப்தமிழ்நாடு’தலைவர்பதவிவழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்களான சி.விஜய்பாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு த.வெ.க.,வில் அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.ஊழலற்ற அரசு நிர்வாகத்தை தருவதில் உறுதியாக இருக்கும் முதல்வர் விஜய், இனியாவது அவருக்காகவே வாழ்ந்து வரும் எங்களை போன்ற நிர்வாகிகளையும் அரவணைத்து கவுரவமான பதவிகளை வழங்க முன்வரவேண்டும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.