fbpx
Others

புதுச்சேரியில் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்

காவல்துறையில் 5 இன்ஸ்பெக்டர், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 9 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு (பணியாற்றிய இடம் அடைப்புக்குறிக்குள்) இன்ஸ்பெக்டர்கள் பிரவீன்குமார் (புதுச்சேரி உளவுத்துறை) காரைக்கால் உளவுத்துறைக்கும், சஜித் (சிக்மா செக்யூரிட்டி) மாவட்ட சட்ட நிர்வாக பிரிவுக்கும், விஸ்வநாதன் (சிக்மா) டி.ஜி.பி. செயலராகவும், ரமேஷ் பாபு (ஆயுதப்படை) சிக்மா பிரிவுக்கும், வெங்கடாசலதி (சிக்மா) ஒதியஞ்சாலை நிலைய அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர். சப்-இன்ஸ்பெக்டர்கள் ரெனிகுமார் (சிக்மா) மாகி நிலைய அதிகாரியாகவும், பிரதீப் (மாகி) மாகி கடலோர காவல்படைக்கும், ரெனிமேரி டேவிட் (ஆயுதப்படை) வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், பிரமோத் (ஐ.ஜி. செயலர்) சீனியர் போலீஸ் சூப்பிரண்டு செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு, காவலர்கள் என 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை புதுவை காவல்துறை தலைமையக போலீஸ் சூப்பிரண்டு சுபம்கோஷ் பிறப்பித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close