fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

புல்வாமா தாக்குதல் – உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அவரவர் வீடுகளுக்கு சென்றது – மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்டன போராட்டங்களும் , பேரணிகளும் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஜம்மு காஷமீர் டோடா மாவட்டத்தில் பாஜகவினர் தீவிரவாதத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர். ராஜஸ்தானிலும் குஜ்ஜார் இன மக்கள் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கைகளில் தீபங்களை ஏற்றி ரயில் தண்டவாளங்களில் போராட்டம் நடத்தினர். இதே போல் லே பகுதியிலும் மீளுவர்த்திகளை ஏற்றி அமைதி பேரணி நடத்தினர்.

அசாம் மாநிலத்திலும் புல்வாமா தாக்குதலை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையில் உள்ள ஜின்னா இல்லம் அருகே இந்த தாக்குதல் குறித்து சுவரொட்டிகள் ஓட்டப்பட்டிருந்தது.இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் இரவு 8 மணி முதல் 8.15 வரை பெட்ரோல் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் கார்குடியில் வைக்கப்பட்டுள்ள வீரமரணமடைந்த சிஆர்பிஎப் வீரர் சிவச்சந்திரன் உடலுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். வீரமரணமடைந்த அந்த வீரரின் உடலுக்கு உறவினர்களும் பொதுமக்களும் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.

அதே போல் தமிழகத்தை சேர்ந்த மற்றொரு வீரரான சுப்பிரமணியனின் உடலும் ஒரு தனி வாகனம் மூலமாக அவரது சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்பட்டது. சுப்பிரமணியனின் உடலுக்கு தமிழக அரசின் சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணன், அமைச்சர் கடம்பூர் ராஜு , கலெக்டர் சந்தீப் மற்றும் பல அதிகாரிகளும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் மற்ற வீரர்களின் உடல்களும் அவரவர் சொந்த ஊருக்கு தகுந்த மரியாதையுடன் எடுத்துச்செல்லப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close