மரண குழியாக மாறும் மகாராஷ்டிரா…! அதிர்ச்சி தரும் கொரோனா பலி…!
Maharashtra corona dead cases reach 617

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 617 ஆக அதிகரித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவை இன்னும் விட்டு வைக்கவில்லை. கொரோனா பாதிப்பு தீவிரமாகி வருகிறது. ஊரடங்கு அமலில் உள்ள போதிலும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
அதிக அளவாக மகாராஷ்டிராவில் 15,525 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் 34 பேர் பலியாகி உள்ளனர். அதன் மூலம் பலி எண்ணிக்கை 583ல் இருந்து 617 ஆக உயர்ந்து உள்ளது. 2819 பேர் பாதிப்பில் இருந்து விடுபட்டு வீடு திரும்பி உள்ளனர்.
தொடரும் கொரோனா பாதிப்பால் அம்மாநில மக்கள் தொடர்ந்து அச்சத்தில் இருக்கின்றனர். அதே நேரத்தில் கோவாவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 7 பேரும் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். அதனால் கொரோனாவில் இருந்து முழு அளவில் விடுபட்ட நிலையை கோவா பெற்றுள்ளது.















