GeneralRETamil NewsTrending Nowஇந்தியா
விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு..! மத்திய அரசுக்கு ஓகே சொன்ன சிவன்!
ISRO Chief Sivan welcomes cabinet decision
சென்னை:
விண்வெளி துறையில் தனியாரின் பங்களிப்புக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளதற்கு இஸ்ரோ தலைவர் சிவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் இஸ்ரோ விண்வெளி திட்டங்களில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி தர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முடிவுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: மேம்பட்ட விண்வெளி தொழில்நுட்பம் கொண்ட சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
தனியார் நிறுவனங்களுக்கு விண்வெளித் துறை கதவுகளை திறப்பதன் மூலம் இஸ்ரோவின் சாதனைகளை மேம்படும். அதன் சீர்திருத்த நடவடிக்கைகளை செயல்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது. விண்வெளித்துறையை ஊக்குவிக்கும் என்று கூறினார்.