திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது….
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 15ல், தீப திருவிழா கொடியேற்றத்துன் தொடங்கியது. இதில் முக்கிய விழாவில், நாளை, 24ல், பஞ்ச பூதங்கள் ‘ஏகன், அனேகன்’ என்பதை விளக்கும் வகையில், அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமி கருவறை எதிரில் பரணி தீபமும், ‘அனேகன், ஏகன்’ என்பதை விளக்கும் வகையில் மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை, இன்று, 23ல், மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. மேலும், மஹா தீபம் ஏற்ற, 4,500 கிலோ நெய், மற்றும், 1,150 மீட்டர், காடா துணியால் ஆன திரி தயார் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விழாவை முன்னிட்டு, சுவாமி சன்னதி முழுவதும், பல்வேறு வண்ணங்களில், ரோஜா, சாமந்தி, பூக்களால் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக உள்ளது. கோவில் வளாகத்தில் கலை அரங்கில் சமயசொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகளும், ஆன்மீக பாடல்களும் ஒலித்தவாறு விழா களைகட்டியுள்ளது.விழாபாதுகாப்புபணிக்காக,15,500போலீசார்
பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு, கோவில் வளாகம், மற்றும் திருவண்ணாமலை மாநகரம், திருவண்ணாமலையிலிருந்து, 10 கி.மீ தொலைவிற்கு போலீசார் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்கள்திருவண்ணாமலைமாநகரினும்அனுமதிக்கப்படாமல், 5 கி.மீ தொலைவிற்கு அப்பாலும், கனரக வாகனங்கள், 25 கி.மீ துாரத்திற்கு அப்பால் மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பப்படுகிறது.விழாவின் முன்னேற்பாடு பணிகளை அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கலெக்டர் வந்தனா கார்க்மற்றும்போலீஸ்அதிகாரிகள் கூட்டாக ஆய்வு நடத்தினர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இந்தாண்டு கார்த்திகைதீபத்திருவிழாநவம்பர்15ம்தேதி,கொடியேற்றத்துடன்துவங்கியது.தீபதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (24ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகிய பஞ்ச பூதங்கள், சிவபெருமான் ஒருவனே என்பதை விளக்கும் வகையில், சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி கோஷத்துடன் தரிசனம் செய்தனர். ’அனேகன், ஏகன்’ என்பதை விளக்கும் வகையில் இன்று மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயர மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. விழாவையொட்டி சுவாமி சன்னதி முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகம் முழுவதும், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. பக்தர்கள் குவிந்து வருகின்றனர்…