fbpx
Others

திமுகவினரை அவையிலிருந்து வெளியேற்​ற சபாநாயகர் உத்தரவு…

தமிழக சட்​டப்​பேர​வை​யில் நேற்று காவல்​துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்​துக்கு பதிலளித்​துப் பேசிய முதல்​வர் விஜய், திமுக மீது பல்​வேறு குற்​றச்​சாட்​டு​களை அடுக்​கடுக்​காக முன்​வைத்​தார். இந்தக்கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியது. சட்டப்பேரவையில் இன்று பொதுத்துறை, அயலக தமிழர் நலன், மாநில சட்டசபை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, திட்டம் மற்றும் வளர்ச்சி, ஓய்வூதியங்களும் ஓய்வுக்கால நன்மைகளும் போக்குவரத்து ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடக்கிறது.இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில்சர்காரியாகமிஷன்அறிக்கை,மிசாவிவகாரம்பற்றியமுதல்வரின்பேச்சைஅவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி திமுகவினர் கோரிக்கை விடுத்தனர்.அப்போது பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, “சட்டப்பேரவைக்கு என்று மரபுகள் உள்ளன. அதன்படி, முதல்வர் கண்ணியமாகவே பேசுவார். ஆனால், முதல்வர் விஜய் அவை மரபை மீறி முதல்வர் பேசி இருக்கிறார்.அதேபோல், நீதி விசாரணையில் இருப்பதையும் அவையில் பேசஅனுமதியில்லை. முதல்வர் விஜய் நேற்று பேசியபோது நாங்கள் அமைதியாகவே இருந்தோம். அமலாக்கத் துறை அறிக்கையை வாசித்தது அவையை மீறிய செயல்.ஜனநாயகத்துக்கு எதிராக வந்த மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தார் மு.க.ஸ்டாலின். ஏன்,பெரியார் கொள்கையை ஏற்றுள்ள திக தலைவர் வீரமணி கூட மு.க.ஸ்டாலின் உடன் சிறையில் இருந்தார். மிசா சட்டத்தை பற்றி முதல்வர் பேசியதையும் எதிர்க்கிறோம். நேற்று மாறன் பற்றி முதல்வர் பேசினார், அவைக்குள் இல்லாதவர் பற்றி பேசக்கூடாது என விதியில் உள்ளது. கலைஞர் கருணாநிதி மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என சர்காரியாகமிஷனேகூறிவிட்டது.குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் வழக்கு தொடர முடியாது என்றும் சர்காரியா கமிஷன் கூறிவிட்டது. முதல்வர் விஜய் ஆதாரம் இன்றி பேசிய அனைத்தையும் அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்றார்.இதைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியபோது திமுகவினர் ஒரு நிமிடம் கூட கவனிக்கவில்லை. மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது பற்றி முதல்வர் விஜய் குறிப்பிட்டது உண்மையான செய்தியே. அதேபோல் சர்க்காரியா கமிஷன் பற்ற்றியும் பலமுறை சட்டப்பேரவையில் பேசப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் திமுகவினர் எனது அனுமதியின்றி பதாகைகளைக் காட்டியது ஏன்?. நேற்று முதல்வர் விஜய் பேசிய எதையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கத் தேவையில்லை.” என்றார்.இதனைத் தொடர்ந்து திமுகவினர் சபாநாயகரை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். அதற்கு சபாநாயகர் கடும் கண்டனங்களை தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் செங்கோட்டையன், “சட்டப்பேரவையில் இரண்டு நாட்களாக அமளியில்ஈடுபடும்திமுகவினரைவெளியேற்றவேண்டும்”என்றுகோரிக்கைவிடுத்தார்.இதைத் தொடர்ந்து சபாநாயகர், “திமுக கொறடா சட்டப்பேரவையில் பேச அனுமதி வழங்குகிறேன். அவர் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்” என்றார்.ஆனால், திமுகவினர் தொடர்ந்து அவையில்அமர்ந்துகோஷமிட்டனர்.எனவே,அவையிலிருந்துதிமுகவினரைவெளியேற்றும்படிஅவைக்காவலர்களுக்குசபாநாயகர்உத்தரவிட்டார்.இதனைத்தொடர்ந்துஅவைக்காவலர்கள் திமுகவினரை வெளியேற்றினர்.

Related Articles

Back to top button
Close
Close