GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு
மதுரையில் 12 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு…! தீவிரம் அடையும் பரிசோதனை!
Madurai corona cases crosses 12000

மதுரை:
மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,005 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,005 ஆக அதிகரித்துள்ளது.
















