தமிழகத்திற்கு ரூ.4,466 கோடி மத்திய அரசு விடுவித்துள்ளது….!
நிதியமைச்சகம்வெளியிட்டஅறிக்கையில்;மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு தொகை ரூ.1,09,019 கோடியை மத்திய அரசு விடுவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஆகஸ்ட் மாதம் விடுவிக்கப்படும் தொகையுடன் கூடுதல் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் மூலதன மற்றும் மேம்பாட்டுச் செலவினங்களை விரைவுபடுத்தவதற்காக இந்தக் கூடுதல் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது,இவ்வாறுகூறப்பட்டுள்ளது.மொத்தம் விடுவிக்கப்பட்ட ரூ.1,09,019 கோடியில், தமிழகத்திற்கு ரூ.4,466 கோடி வரிப்பகிர்வு தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.அதிகபட்சமாகஉத்தரபிரதேசத்திற்குரூ.19,208கோடிவிடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, பீஹாருக்கு ரூ.10,845 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ.8,010 கோடியும், மேற்கு வங்கத்திற்கு ரூ.7,866 கோடியும், மஹாராஷ்டிராவுக்கு ரூ.7.022 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.6,460 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.4,819 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.4,597 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.