சோனியா விஜய்க்கு நன்றி தெரிவித்து கடிதம்…
டில்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில், முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் சமீபத்தில் சிகிச்சை பெற்றார். அவரை சந்திக்க காங்., மூத்த தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் சென்றார். அப்போது, தன்கர் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். அது, சோனியாவின் சுயசரிதை. இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.டில்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில், முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் சமீபத்தில் சிகிச்சை பெற்றார். அவரை சந்திக்க காங்., மூத்த தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் சென்றார். அப்போது, தன்கர் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். அது, சோனியாவின் சுயசரிதை. இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.துணை ஜனாதிபதி பதவியை திடீரென ராஜினாமா செய்த போது, அதற்கான காரணத்தை தன்கர் தெரிவிக்கவில்லை. காங்கிரசுக்கு சாதகமாக செயல்பட்டதால், அவரை ராஜினாமா செய்யும்படி பா.ஜ., சொல்லியதாக அப்போதுபேசப்பட்டது.அது,இப்போதுஉண்மையாகிவிட்டதுஎன்கின்றனர் பா.ஜ.,வினர். புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த த.வெ.க., தலைவரும், தமிழக முதல்வருமான விஜய்க்கு சோனியா, ராகுல், பிரியங்கா ஏகப்பட்ட மரியாதை அளித்து மற்ற காங்கிரசாரை ஓரங்கட்டி விட்டனர் என, கட்சிக்குள் பேசப்படுகிறது.இதற்கிடையே, இன்னொரு விஷயமும் அலசப்படுகிறது. முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து சோனியா கடிதம் எழுதிய விவகாரம் தான் அது. இந்த கடிதத்தில் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் கையெழுத்திட்டு உள்ளனராம்.