fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

ஒன்றல்ல… இரண்டல்ல… 65 லட்சம்…! கொரோனா நோயாளிகளின் லேட்டஸ்ட் நிலவரம் இதுதான்…!

65 lakh corona cases in world wide

ஜெனீவா:

உலக நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64,74,075 ஆக உயர்ந்துள்ளது.

உலகையே ஒரு வழியாக்கி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64,74,075 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,81,718 ஆக அதிகரித்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 30,06,831 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் புதிதாக 21,882 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 18,81,205 ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யாவில் 4,23,741, ஸ்பெயினில் 2,87,012, பிரிட்டனில் 2,77,985, பிரேசிலில் 5,56,668, இத்தாலியில் 2,33,515, பிரான்சில் 1,89,220, ஜெர்மனியில் 1,84,091, துருக்கியில் 1,65,555, ஈரானில் 1,57,562, சீனாவில் 83,022 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அமெரிக்காவில் கொரோனாவுக்கு புதிதாக 1,134 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1,08,059 ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் 5,037, ஸ்பெயினில் 27,127, பிரிட்டனில் 39,369, பிரேசிலில் 31,278, இத்தாலியில் 33,530, பிரான்சில் 28,940, ஜெர்மனியில் 8,674, துருக்கியில் 4,585, ஈரானில் 7,942, சீனாவில் 4,634 பேர் இதுவரை பலியாகி இருக்கின்றனர்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close