குருவாயூர் கோயிலில் கட்டுப்பாடுகளுடன் திருமணம்..! கேரளா அனுமதி!
Marriage permitted in guruvayur temple

திருச்சூர்:
குருவாயூர் கோவிலில் திருமணம் நடத்திக் கொள்ள கேரளா அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா காரணமாக கேரளாவில் வழிபாட்டு தலங்களில் மக்கள் கூடுவதை தடை செய்தது. 5ம் கட்ட ஊரடங்கு காலகட்டத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்ஒரு பகுதியாக நாளை முதல் குருவாயூர் கோவிலில் நிபந்தனைகளுடன் திருமணம் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள குருவாயூர் கோவிலுக்கு மாநில அரசு அனுமதி அளித்து உள்ளது.

இது குறித்து கோயில் நிர்வாகம கூறி உள்ளதாவது: நாள் ஒன்றுக்கு 60 திருமணங்கள் வரை நடத்தலாம். காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையில் திருமணம் நடத்திக்கொள்ளலாம்.
முன்பதிவு உடனடியாக துவங்குகிறது. திருமணம் செய்து கொள்பவர்களின் புகைப்படத்துடன் கொரோனா இல்லை என்ற மருத்துவ சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையில் திருமணத்தை முன் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.















