Others

சுகாதார சீர் கேடு…தரமற்ற கேன் வாட்டர் கம்பெனிகள்! கலெக்ட ர் நடவடிக்கை…?

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செங்குன்றம், வடகரை, நல்லூர் ஊராட்சி, சோழவரம் ஊராட்சி, பகுதிகளில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்யும் மினரல் வாட்டர் கம்பெனிகள் அதிகம் உள்ளது.அந்த கம்பெனிகளில் சுகாதாரமற்ற முறையிலே தண்ணீர் கேன்களில் நிரப்பி விற்கப்படுகிறது.இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மேலும் வாட்டர்கேன்களில்கம்பெனிபெயர்குறித்தலேபிள்கள்ஓட்டப்படுவதில்லை.கேன்களுக்கு சீல் வைப்பதில்லை,இஷ்டம் போல் தண்ணீரை நிரப்பி விற்பனை செய்து வருகிறார்கள். குறிப்பாக இந்த பகுதியில் உள்ள திருமண மண்டப ங்களுக்கு உணவு தயாரிக்க இப்படிப்பட்ட தரமற்ற தண்ணீர்தான் பெருமளவுபயன்படுத்தப்படுகிறது. இதனை உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளும், குடிநீர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.  திருவள்ளூர் கலெக்ட ர் நடவடிக்கை எடுப்பாரா?

Related Articles

Back to top button
Close
Close