கிராமப்புறங்களில் பணியாற்றினால் மட்டுமே டாக்டராக பதிவு செய்ய முடியும்– கர்நாடக அரசு…
கர்நாடக மாநிலத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகள், நிகர்நிலைப் பல்கலைகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எம்.பி.பி.எஸ்., முதுநிலை மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளை முடிக்கும் டாக்டர்கள் ஓராண்டு காலம் கிராமப்புறங்களில் பணியாற்றுவதுகட்டாயமாக்கப்பட்டிருந்தது.வழக்குகள் கடந்த 2023- முதல் தனியார் ஒதுக்கீட்டு இடங்களின் கீழ் பயின்ற மாணவர்களுக்கும் இந்த நிபந்தனை நீட்டிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் பணியாற்றினால் மட்டுமே டாக்டராக பதிவு செய்ய முடியும் என்ற அரசாணையையும் கர்நாடக அரசு வெளியிட்டது.இந்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் அராதே அமர்வு முன் விசாரணைக்கு வந்தன.அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தனியார் ஒதுக்கீட்டு இடங்களில் அதிகக் கட்டணம் செலுத்தி பயிலும் மாண வர்களை சட்டப்பிரிவு 14-ன் கீழ் தனிப் பிரிவாகக் கருத வேண்டும்.’எனவே, அவர்களுக்கு கிராமப்புற கட்டாய பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என, வாதிட்டார்.இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘கிராமப்புறங்களில் பணியாற்றுவதில் இருந்து தனியார் மருத்துவக் கல்லுாரி
மாணவர்களுக்கு ஏன் விலக்களிக்க வேண்டும்? மருத்துவ அறிவியல் என்பது நாட்டின் முக்கியமான வளம்.’அதனை மக்களின் தேவைக்கேற்ப பயன்படுத்துவது மாநில அரசின் உரிமை. மேலும், மருத்துவ மாணவர்கள் அனைவருக்கும் தேசத்தை கட்டி எழுப்புவதில் முக்கிய கடமை உள்ளது’ என, சுட்டிக்காட்டினர்.கொள்கை வகுப்பு விசாரணையின் போது ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நாடு தழுவிய சீரான கொள்கையை வகுப்பது குறித்து மத்திய அரசிடம் உரிய அறிவுறுத்தல்களை பெற்று நீதிமன்றத்தில் தெரிவிப்பதாகக் கூறினார்.இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘மருத்துவ மாணவர்களுக்கு கட்டாய கிராமப்புறச் சேவையை அமல் படுத்த தேசிய அளவிலான சீரான கொள்கையை உருவாக்குவது குறித்து மூன்று வாரங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்’ என, உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.