REஅரசியல்இந்தியா

புத்திசாலித்தனமாக ஊரடங்கை குறைக்க வேண்டும் – ரகுராம் ராஜன்

India needs to be cleverer in lifting lockdown - Raguram Rajan

 

ஊரடங்கை புத்திசாளித்தனமாக குறைக்க வேண்டும் என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி காணொளி வாயிலாக ஊரடங்கு மற்றும் பொருளாதார நிலை பற்றி முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனிடம் ஆலோசனை நடத்தினார். வெகுநேரம் நடந்த இந்த ஆலோசனையில் நாட்டின் பொருளாதாரத்தை பற்றிய முக்கிய ஆலோசனைகள் நடத்தப் பட்டதாக தெரிகின்றது.

மக்களை முடக்கத்திலையே வைத்திருந்தால் பொருளாதாரம் இன்னும் பாதிக்கப்படும். எனவே ஊரடங்கை படிப்படியாக குறைப்பது நல்லது, இந்த மாதரி நேரத்தில் புத்திசாலித்  தனத்துடன் நடந்து கொள்வது அவசியம் என கூறியுள்ளார். மக்களுக்கு நீண்ட நாட்கள் உணவளிக்கும் அளவிற்கு இந்தியாவிடம் பொருளாதார வசதிகள் இல்லை. இந்த கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவ சுமார் 65 ஆயிரம் கோடி தேவைப்படும் எனவும் கூறியுள்ளார்.

கட்டுப்பாடுகளை தளர்த்தும் பொழுது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் இருந்தால் அவரை தனிமைப்படுத்த வேண்டும், பிறருக்கு தொற்று பரவாத அளவுக்கு பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close