ஊத்துக்கோட்டை–தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்த பல்லாழங்குழியான அவல நிலை..?
ஊத்துக்கோட்டையில் போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை ஒரு வருடத்திலேயே சேதமடைந்த பல்லாழங்குழியான அவல நிலை காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையை சீரமைக்க முன்வர வேண்டும் என வாகன ஓட்டிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், ஜனப்பன் சத்திரம் முதல் பெரியபாளையம் வழியாக ஊத்துக்கோட்டை வரை கடந்த வருடம் ரூ.32 கோடி மதிப்பீட்டில் தார்ச்சாலை போடப்பட்டது. இந்த சாலையில் சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் நாகலாபுரம், பிச்சாட்டூர், புத்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கர்னூல் ஆகிய பகுதிகளுக்கும், இதேபோல் ஆந்திராவில் இருந்து சென்னைக்கும் கார், பஸ், வேன், லாரி உள்ளிட்ட ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகின்றனஇதனால் இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி மரண பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புதிதாக போடப்பட்ட சாலை ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் பள்ளங்கள் ஏற்பட்டு பல்லாங்குழி சாலைகளாக மாறியுள்ளது. இந்த சாலை போடப்பட்ட ஒரு வருடத்திலேயே சேதமடைந்த நிலையில், சாலைப் பள்ளத்தில் வியாபாரிகள் சிலர் மண் கொட்டி சமன் செய்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊத்துக்கோட்டையில் மரண பள்ளங்களாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.