REதமிழ்நாடு

தமிழகத்தில் வெயில் 100 டிகிரியை தாண்டியது!

தமிழ்நாட்டிலுள்ள 7 இடங்களில் இன்று 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகியது.

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் மழை பொய்த்துப்போனது. வழக்கமாக பெய்யும் மழையை விட, மிகக் குறைந்த அளவே மழை பெய்தது.

குறிப்பாக சென்னையில் குறைந்த  நாட்கள் மட்டுமே மழை பெய்தது. இதனால் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் குடிநீர் திண்டாட்டம் இப்போதே தொடங்கிவிட்டது. ஆனால் அதனை சரிசெய்யும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்தச் சூழலில் காற்றின் ஈரப்பதம் குறைந்துள்ளதாகவும் மேக மூட்டங்கள் காணப்படாததால் குமரி முதல் வட கர்நாடகம் வரை உள்ள பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளதாக சென்னை வானிலை மையம் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் இன்று வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியது.

இன்று அதிகபட்சமாக திருத்தணியில் 104 டிகிரியாக வெயில் பதிவாகியுள்ளது.

சேலத்தில் 103 டிகிரியாகவும்,

வேலூர் மற்றும் மதுரையில் 102.5 டிகிரியாகவும்,

கரூரில் உள்ள பரமத்தியில் 102 டிகிரியாகவும்,

தருமபுரி மற்றும் திருச்சியில் 101 டிகிரியாகவும் வெயில் பதிவாகியது.

இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close