fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

டிக்டாக் பிரபலம் திடீர் தற்கொலை…! ரசிகர்கள் அதிர்ச்சி!

Tiktok siya kakkar suicide

டெல்லி:

டிக்டாக்கில் மிகப் பிரபலமாக இருந்த சியா கக்கார் என்கிற 16 வயது இளம்பெண், டெல்லியில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

டிக்டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் சியா கக்கார். 16 வயதே ஆன அவரின் வீடியோக்கள் வைரல். 11 லடசத்துக்கும் அதிகமான பேர் அவரை பின் தொடர்ந்தனர்.

டிக் டாக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், யூடியூப் உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் சியா இயங்கி வந்தார். இந் நிலையில், அவர் திடீரென இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். டெல்லியில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

சமூக வலைதளத்தில் சியாவைப் பின்தொடர்ந்து வரும் பல ரசிகர்கள் அவரது தற்கொலை குறித்து அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளனர். இது அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதாவது பிரச்னையால் இருந்திருக்கலாம்.

வேலையைப் பொறுத்தவரை அவர் நன்றாகவே இருந்தார். சியா ஒரு பிரகாசமான திறமைசாலி என்று அவரது மேலாளர் கூறியுள்ளார். முன்னதாக, ஜூன் 14ம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் தனது இல்லத்தில் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Back to top button
Close
Close