.2023 ஆம் ஆண்டில் 2.1 லட்சம் இந்தியர்கள் குடியுரிமையைத் துறந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.புதுடெல்லியில் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற்ற மாநிலங்களவைக் கூட்டத்தில் குடியுரிமையைத் துறந்த இந்தியர்களின் தரவுகளை இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் சமர்ப்பித்தார்.தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டில், குடியுரிமையைத் துறந்த இந்தியர்களின் எண்ணிக்கை 216,219 ஆக உள்ளது. 2022ஆம் ஆண்டில் 225,620 பேரும், 2021ஆம் ஆண்டில் 163,370 பேரும், 2020ஆம் ஆண்டில் 85,256 பேரும், 2019 ஆம் ஆண்டில் 144,017 எண்ணிக்கையிலானஇந்தியர்கள்தங்களின்குடியுரிமையைத்துறந்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சித்தலைவர் ராகவ் சட்டா, “இத்தகைய அதிக எண்ணிக்கையிலானதுறவறம்மற்றும்இந்தியக்குடியுரிமையைஏற்றுக்கொள்பவர்களின் குறைவான எண்ணிக்கை போன்றவற்றிற்கான காரணங்களைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளைஅரசுமேற்கொண்டுள்ளதா ? “மேலும், குடியுரிமைத் துறப்பின் மூலம் நாட்டிற்கு ஏற்பட்ட நிதியிழப்பு மற்றும் வளமானதொழிலதிபர்களின்இழப்பைத்தடுப்பதற்கும்அரசாங்கம்முயற்சித்ததா?,”என்றுகேள்விஎழுப்பினார்.இதனையடுத்து, “குடியுரிமையைத் துறப்பதற்கும், ஏற்பதற்கும்உள்ளகாரணங்கள்அவரவர்தனிப்பட்டவிருப்பங்கள்.உலகில்எங்குவேண்டுமானாலும்தொழில்புரியலாம்என்பதைஇந்தியஅரசுஅங்கீகரித்துள்ளதால், பலரும் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்கின்றனர்.“வெளிநாடுகளில் வசிக்கும் வெற்றிகரமான,வளமானமற்றும்செல்வாக்குமிக்கஇந்தியர்கள்இந்தியாவுக்குசொத்தாகத்திகழ்கின்றனர்,” என்று கீர்த்திவர்தன் தெரிவித்தார். கூடுதல் தகவல்களாக, 2019ஆம் ஆண்டில், வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின்எண்ணிக்கை675,541ஆகஇருந்தநிலையில்,2024ஆம்ஆண்டில்1,335,878ஆகஉயர்ந்துள்ளது.அதுமட்டுமின்றி, 2019 முதல் 2024 வரையிலான கடந்த 5 ஆண்டுகளில், விபத்துகள் மற்றும் வன்முறைத் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 41 நாடுகளில் 633 இந்திய மாணவர்களின் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.