RETamil Newsஇந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மத்திய சுகாதாரத்துறை

உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்திய இந்த கொரோனா தொற்று தற்போது இந்தியாவிலும் அதன் அதிக அளவிலான பாதிப்பை தொடங்கியுள்ளது. தற்போது வழக்கமான செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் இன்று தெரிவித்ததாவது ;

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் நாடு முழுவதும் அதற்கென 755 மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மஹே மற்றும் கர்நாடகாவின் குடகுவில் கடந்த 28 நாட்களில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.

கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடு தளர்வு கிடையாது. மற்ற பகுதிகளில் தளர்வு இருக்கும். அதுமட்டும் அல்லாமல் கடந்த 14 நாட்களில் 23 மாநிலங்களில் உள்ள 54 மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. என தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close