அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் பேட்டி… சிறப்பு செய்தி..
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் நெல்மூட்டைகளை பதுக்கி னாலும்,திருப்பி அனுப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!தீபாவளிக்குள் அரிசி விலை குறையும் வாய்ப்பு! அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் பேட்டி!!!ஆந்திரா, தெலுங்கான உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு லாரிகளில் வரும் நெல் மூட்டைகளை மாநில எல்லைகளில் அதிகாரிகள்திருப்பிஅனுப்பப்படுவதாகவந்தசெய்தியின்அடிப்படையில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன், உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கவிதா ஆகியோர் மாதவரம் தொகுதி செங்குன்றம் நெல் மண்டி, தற்காலிக பேருந்து நிலையத்தில் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள நெல்மூட்டைகள் ஏற்றி வந்த லாரிகளை ஆய்வு செய்தனர்.ன்னர் லாரி ஒட்டுநர்களிடம் நெல்வரத்து குறித்து கேட்டறிந்தனர்.செங்குன்றம் நெல் அரிசி வணிகர் சங்க திருமண மண்டபத்தில் நெல் அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் மண்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் டி.துளசிங்கம், செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கதலைவர். டி. கோபி, செயலாளர் ஏ.லோகநாதன், துணைத்தலைவர் எம்.ஜெயபாலன், பொருளாளர் கே.என். குணசேகரன், இணைச் செயலாளர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த ஆய்வின் போது, செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர் மகேஸ்வரி, பொன்னேரி வட்டாட்சியர் ஜெய்கர்பிரபு, செங்குன்றம் பேரூராட்சி செயல் அலுவலர். பாஸ்கரன், செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையர் பிராங்ளின் டீ ரூபன், செங்குன்றம் காவல் ஆய்வாளர். கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் ரவீந்திரன், தவெக செங்குன்றம் நகரச் செயலாளர் கே.விஜி உள்ளிட்ட தவெக நிர்வாகிகள், அரிசி ஆலை உரிமையாளர்கள், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பின்னர் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர்கள் தீபாவளிக்குள் அரிசி விலை குறையும் எனவும், நாள் ஒன்றுக்கு 150 முதல் 200 லாரிகளில் சுமார் 35,000 மெட்ரிக் டன் நெல் வருவதாகவும், தெலுங்கானாவில் இருந்து அதிகளவு நெல்வரத்து அதிகரித்து வருகிறது எனவும், நாளொன்றுக்கு 4000-க்கும் மேற்பட்ட டன் வருவதாகவும், தீபாவளிக்காக விலை அதிகமாக உள்ளதாலும், மிக மிக சன்ன ரக அரிசி தெலுங்கானா, ஆந்திராவில் இருந்து வருகிறது எனவும்,அரிசி விலை கட்டுப்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவித்தார்.வெளிமாநிலங்களில் இருந்து வரும் நெல் மூட்டைகளை ஏற்றி வரும் லாரிகளை நிறுத்த பார்க்கிங் வசதி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரிசி விலை கட்டுக்குள் வரும், அரிசி விலை குறையும் எனவும் தெரிவித்தார். பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரிசி குறைக்கப்பட வேண்டும் என்பதே முதல்வர் விருப்பம் எனவும், சன்ன ரகத்தை பொது மக்கள் பயன்படுத்துகிறார்கள் எனவும், மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் ஆய்வு செய்ததாகவும், செங்குன்றம் நெல் மண்டிக்கு வரும் நெல் மூட்டைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதாகவும் தெரிவித்தார்.செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பும் போது, ராக்கெட் போல் அதிவேக த்தில் அரிசி விலை ஏறிக் கொண்டே செல்கின்றதே இதனால் சாமான்ய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்களே என்ற கேள்விக்கு, விரைவில் அரிசி விலை விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும், அரிசி பதுக்கல் எதுவும் இல்லை எனவும் கூறினார்.

