வால்பாறை – பொள்ளாச்சி மலைச்சாலையின் 40 கொண்டை ஊசி வளைவுகளிலும் CCTV …

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வரவேற்புகோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் வால்பாறை – பொள்ளாச்சி மலைச்சாலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மலைச்சாலையில் அமைந்துள்ள 40 கொண்டை ஊசி வளைவுகளிலும் தற்போது CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல் துறையினரால் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வால்பாறை மலைச்சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் பயணம் செய்து வருகின்றன. இந்த சாலையில் அடிக்கடி அதிவேக பயணம், விதிமீறல்கள் மற்றும் விபத்துகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக கொண்டை ஊசி வளைவுகளில் வாகனங்களை கவனக்குறைவாக இயக்குவதால் பலமுறை அபாய சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன.இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் காவல் துறையினர் மலைச்சாலையின் 40 கொண்டை ஊசி வளைவுகளிலும் CCTV கேமராக்களை நிறுவி கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த கேமராக்கள் மூலம் அதிக வேகத்தில் செல்லும் வாகனங்கள், ஆபத்தான முறையில் ஓட்டப்படும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் அனைத்தும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.மேலும் இரவு நேரங்களில் மலைச்சாலையில் நடைபெறும் வாகன போக்குவரத்து மற்றும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளையும் எளிதில் கண்காணிக்க முடிவதால் பாதுகாப்பு அதிகரித்துள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், “40 கொண்டை ஊசி வளைவுகளும் மிகவும் ஆபத்தான பகுதிகள். இங்கு CCTV கண்காணிப்பு அமைக்கப்பட்டிருப்பது விபத்துகளை குறைக்க உதவும். பயணிகளுக்கும் பாதுகாப்பு உணர்வு அதிகரித்துள்ளது” என்று தெரிவித்தனர்.மேலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பலரும், “காவல் துறையின் இந்த நடவடிக்கை மிகவும் பாராட்டத்தக்கது. மலைச்சாலையில் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு தற்போது அதிகரித்துள்ளது” என கருத்து தெரிவித்துள்ளனர்.
வால்பாறை – பொள்ளாச்சி மலைச்சாலையின் 40 கொண்டை ஊசி வளைவுகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த CCTV கண்காணிப்பு நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கோவைமாவட்ட புகைபட கலைஞர் ஜெயப்ரகாஷ் தே
