fbpx
Others

வன்னியரசு சமூக நீதித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்…..

தமிழக அமைச்சரவையில் பங்கேற்கும் வி.சி.க.: அமைச்சராக பதவியேற்கிறார் வன்னிஅரசு | VCK to participate in Tamil Nadu cabinet: Vanni Arasu takes oath as ministerஇதுவரை ஆதிதிராவிடர் நலத்துறை என்று அழைக்கப்பட்ட துறையின் பெயர் மாற்றப்பட்டு, சமூக நீதித்துறை என்ற புதிய பெயரில் தனி துறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய துறைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசுமுதல்அமைச்சராகநியமிக்கப்பட்டுள்ளார்.ஆளுநர் மாளிகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஷாஜகான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதன் மூலம் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் 21/5/26 புதிதாக இணைந்த அமைச்சர்களுக்கு இலாக்கா ஒதுக்கீடு செய்யப்பட்டபோது சமூக நீதித்துறை என்ற புதிய பெயரில் தனி துறையாக மாற்றப்பட்ட அறிவிப்பு வெளியானது. இந்த மாற்றம் தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. சமூக நீதி என்ற கருத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் துறையின் பெயர் மாற்றப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. வன்னி அரசு திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ. ஆவார். அவருக்கு சமூக நீதித்துறை மட்டுமின்றி, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் மலைவாழ் மக்கள் நலத்துறையும் கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த துறைகள் ஒதுக்கீடு மூலம் சமூக நீதி சார்ந்த பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள முடியும்.இதேவேளையில், இன்று அமைச்சராக பதவியேற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பாபநாசம் தொகுதி MLA ஏ.எம். ஷாஜகான் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வக்ஃப் வாரியத் துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆளுநர் பொறுப்பில் உள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் இந்த இலாக்கா ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்தார். பதவியேற்பு விழா முடிந்த சில நிமிடங்களில் இந்த அறிவிப்பு வெளியானது.

Related Articles

Back to top button
Close
Close