fbpx
Others

மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் பிரபு—சிறப்பு செய்தி

*தொடர் மின்வெட்டு குறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்தார் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் பிரபு*இன்று முதல் மாதவரம் சட்டமன்ற தொகுதியில் மின் தடை ஏற்படுவது படிப்படியாக குறையும் அளவிற்கு பணிகள் செய்து வருகிறோம்புழல் பகுதியில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்தில் போதிய பணியாளர்கள் இல்லை மேலும் போதிய உபகரணங்களும் இல்லை இதற்கான பணிகளை செய்து வருகிறோம். கூடிய விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என தெரிவித்தார். மின்வாரிய அலுவலக அதிகாரிகளுடன் கலந்து உரையாடல் செய்யப்பட்டது அவர்களுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி தருவதாகவும் அதற்கான ஏற்பாடுகள் செய்வதாகவும் தெரிவித்துள்ளோம்.மின்வாரிய அலுவலகத்தில் தொடர்ந்து அலைபேசிகள் வருவதால் எங்களால் ஃபோன்களை எடுக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அதற்காகவே தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஆட்கள் நியமிக்கப்பட்டு அவர்களுடைய தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.அவ்வாறு புகார் கொடுக்கும் பட்சத்தில் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அது சம்பந்தப்பட்ட தொலைபேசி எண்ணை அறிவித்தார்நேற்று முதல் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மின்வாரிய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற துவங்கி உள்ளார்கள்ஒவ்வொருபகுதிவாரியாகவும்தனித்தனியாகஆட்கள்நியமிக்கப்பட்டுள்ளனர்.மின் தடை ஏற்படுவதற்கு 25% மழை நீர் கால்வாய் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் பணி நடைபெறுவதே காரணம் அவர்கள் எந்தவித அறிவிக்கும் இல்லாமல் பள்ளங்களை தோண்ட மின் வயர்களை துண்டித்துச் செல்கிறார்கள் இது குறித்துமின்வாரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். கண்டிப்பாக இதற்கு தீர்வு காண்போம் மின்தடை படிப்படியாக குறையும் என தெரிவித்தார்மின்வாரிய புகார்கள் தெரிவிப்பதற்கு9600832026 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் நிச்சயமாக புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக மின் தடை குறித்து புகார்கள் துரிதமாக செயல்பட்டு தீர்வு காணப்படும் என மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்

 

Related Articles

Back to top button
Close
Close