புழல் ஏரிக்கரையில் மண்டிக் கிடந்த செடி, கொடிகளை அகற்றிய தவெக நிர்வாகிகள்.தன்னார்வலர்கள்!
புழல் ஏரிக்கரையில் மண்டிக் கிடந்த செடி, கொடிகளை அகற்றிய தவெக நிர்வாகிகள், உறுப்பினர்கள், தன்னார்வலர்கள்!
மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரியில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் முதற்கட்டமாக சீரமைப்புப் பணிகள் நிகழ்ச்சி திருவள்ளூர் தென்மேற்கு மாவட்ட தவெக சார்பில் மாவட்டச் செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எல். விஜய் பிரபு தலைமையில் புழல் செங்குன்றம் ஏரி கரையில்நடைபெற்றது.இந்நிகழ்வில்500க்கும்மேற்பட்டதமிழகவெற்றிக்கழகதன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு புழல் நீர்த் தேக்க கரைகளில் மண்டிக் கிடந்த செடி கொடிகளை அகற்றினர். அதே போல் பொதுமக்கள் பயன்படுத்தும் புழல் ஏரி நடைபாதைகளில் புதர் போல் காட்சியளித்த செடி, கொடிகளை அகற்றினர். உடனுக்குடன் குப்பைகளை கருப்பு கவர்களில் கட்டி ஏரிக்கரையின் கீழே கொண்டு வரப்பட்டது பாராட்டத்தக்கது.இந்நிகழ்வில் தவெக மாவட்ட, பகுதி, ஒன்றிய, ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.செடி, கொடிகளை அகற்றும் பொழுது யோனி உள்ளிட்ட பொதுமக்களுக்கு உடல்நலத்திற்கு பய தரக்கூடிய மரங்களையும் அகற்றியது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.