புள்ளிலைன் ஊராட்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம்..

செங்குன்றம், திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியம், புள்ளிலைன் ஊராட்சியில் சுதந்திர தினவிழாவைமுன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலர் பொன்னையன் தலைமையில் நடைபெற்றது.புழல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.பற்றாளர் சத்தியவாணி, கிராம நிர்வாக அலுவலர் பிரபு, வேளாண்மை முகம்மது, நியாய விலைக் கடை வினோத்குமார், அங்கன்வாடி பணியாளர் சிவகாமி, மகளில் குழு நிர்வாகிகள், ஊராட்சி பணியாளர்கள், த.வெ.க. புள்ளிலைன் ஊராட்சி செயலாளர்பவித்குமார்உள்ளிட்டபொதுமக்கள்கலந்துகொண்டனர்.புள்ளிலைன்ஊராட்சிக்குட்பட்ட பாயாசம்பாக்கத்தில் சர்வே எண் 36இல் தரிசு நிலம் உள்ளது.தரிசு இடத்தில் பாயாசம்பாக்கத்தில் வசிக்கும் மக்களுக்கான சமுதாய நலக் கூடமும், இடம் இல்லாத இந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கே இந்த இடத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும், மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த இடங்களை ஒதுக்கீடு செய்யக் கூடாது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.