பிராமணர் சமூகத்தை சேர்ந்த வெங்கடரமணன் அறிநிலையத்துறை அமைச்சராக நியமனம்..
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக- அதிமுக என மாறி மாறி ஆட்சி புரிந்து வந்த நிலையில், எதிர்பாரா திருப்பமாக திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நடிகர் விஜய் தலைமையிலான தவெக தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து கடந்த 10ஆம் தேதி முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். அப்போது 9 அமைச்சர்களும் பதவியேற்றன்னர்.இதில் எதிர்பார அறிவிப்பாக தமிழக அரசியல் வரலாற்றில் 50 ஆண்டு காலத்திற்கு பிறகு பிராமண சமுகத்தை சார்ந்த ஒருவருக்கு அமைச்சர்பொறுப்புவழங்கப்பட்டதுஅனைவரையும் திரும்பி பார்க்கவைத்தது. ஏற்கனவே பிராமணர் சமூகத்தை சேர்ந்த ஜெயலலிதா முதலமைச்சராக இருந்துள்ளார். அவரது ஆட்சி காலத்தில் கூட பிராமணர் சமூகத்தை சேர்ந்த யாரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை.இந்த நிலையில் தான் தற்போது மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற வெங்கடரமணன்விஜய்அமைச்சரவையில் இடம்பிடித்தது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முதலமைச்சர் விஜய்யின் 25 ஆண்டுகால நண்பராக இருந்து வரும் வெங்கட் ரமணன், 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் தொடங்கியது முதல் அரசியல் ரீதியாக விஜய்யோடு பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில் தான் வெங்கட் ரமணனுக்கு உணவுத்துறையானது ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழக அமைச்சரவையில் ஏற்கனவே ஒரு பிராமண அமைச்சர் நியமிக்கப்பட்டதை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த நிலையில் தற்போது மற்றொரு பிராமணரும் தமிழக அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார். அந்த வகையில் நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றமானது விஜய் மக்கள் இயக்கமாக மாறிய நிலையில் அதில் நீண்ட காலம் பணியாற்றியவர் தான் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரமேஷ், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ரமேஷ், தனது குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரியாவார். பி.இ.மெக்கானிக்கல் இன்ஜினிரிங் படித்துள்ளார். இது மட்டுமில்லாமல் அரசியல் பக்கமே தலைக்காட்டாத குடும்பத்தில் உருவான முதல் அரசியல் வாதியாகவும் ரமேஷ் உள்ளார். தமிழக வெற்றிக்கழகத்திலும் அரசியல் பணியை தொடங்கிய ரமேஷ்க்கு ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட சீட் கொடுத்தார் தவெக தலைவர் விஜய்.
பணக்காரர்களுக்கு மட்டுமே அரசியல் என்ற நிலையில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ரமேஷ், பெரிய அளவில் பணபலம்இல்லாததால், தேர்தல் செலவுகளுக்காகத் தனது சொந்த வீட்டைஅடகு வைத்து பிரச்சாரம் செய்துள்ளார்.இதனையடுத்து இரு பெரும் கட்சியின் வேட்பாளர்களை வீழ்த்தி ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார் ரமேஷ், இந்த நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை அறிநிலையத்துறை என்பது முக்கிய துறையாக உள்ளது. இந்த துறைக்கு அமைச்சராக ரமேஷை முதலமைச்சர் விஜய் நியமித்துள்ளார். அதே நேரம் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ரமேஷின் தாயார் இன்னமும் சமையல் வேலைக்கு தான் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.