fbpx
Others

தேனி–சர்வதேச இரத்தக் கொடையாளர் தினம்—சிறப்பு செய்தி…

தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் சர்வதேச இரத்தக் கொடையாளர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு இரத்ததான முகாம் இன்று 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை தேனி, பெரியகுளம் சாலையில் உள்ள பிரசன்டேஷன் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.நிகழ்விற்கு ரெட் கிராஸ் துணை சேர்மன் திரு.வி.மகாராஜன் அவர்கள் தலைமை வகித்தார். பொருளாளர் திரு.எஸ்.முகமது ஷேக் இப்ராஹிம் அவர்கள் முன்னிலை வகித்தார்.தேனி நாயுடு சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அமைப்பின் தலைவர் திரு.ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இரத்ததான முகாமை துவக்கி வைத்தார்.காணிக்கை சகோதரிகளின் இல்லத் தலைவி ரூபி, கான்வென்ட் பள்ளி நிர்வாகி சகோ. ஹில்டா ஆகியோர் இரத்தக் கொடையாளர்களை வாழ்த்தி பேசினர்.ரெட் கிராஸ் மேலாண்மை குழு உறுப்பினர்கள் திரு.ஏ.முகமது பாஷா, கொடியரசன், எல்.கே.சிவமணி, எஸ்.காமராஜ், வி.சிதம்பரநாதன், சுந்தர், திருமதி. நாகஜோதி, ஜூனியர் ரெட் கிராஸ் நிர்வாகிகள் ஒ.பார்த்திபன், ஈ.ஜெகநாதன், ஜி.ஒண்டிராஜா, ஆரோக்கிய அமலி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இரத்ததான முகாமிற்கான ஏற்பாடுகளை தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் கெளரவச் செயலாளர் திரு.க.சுருளிவேல் அவர்கள் செய்திருந்தார்.

Related Articles

Back to top button
Close
Close