fbpx
Others

தமிழக முன்னாள் முதல்வரை இந்நாள் முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு….

தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்றார். இந்த சூழலில், அவர் இன்று தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமானமு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு வந்த ஜோசப் விஜய்யை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கே வந்து ஆரத் தழுவி வரவேற்றார். முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு ஜோசப் விஜய் பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார்.பதிலுக்குஸ்டாலினும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தினார். உதயநிதி ஸ்டாலின் ஜோசப் விஜய்க்கு புத்தகம்வழங்கினார்.இதனையடுத்துமுதல்வர்ஜோசப்விஜய்,முன்னாள்முதல்வர்ஸ்டாலின்,  எதிர்க்கட்சித்தலைவர்உதயநிதிஸ்டாலின்ஆகியோர்சிறிதுநேரம்உரையாடினார்கள். இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, சேகர்பாபு உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.இந்தச் சந்திப்பு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close