ஜெயலலிதா பாணியில் இனி இ. பி. எஸ் செயல்படுவாரா….? டெல்லி பயணமா….
தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக புதிய கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. அந்த வகையில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றிபெற்ற நிலையில், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சராகியுள்ளார் விஜய். இந்த நிலையில் அமைச்சர் பதவி கிடைக்கும்என்றஆசையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 25 எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ள நிலையில், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ்25எம்எல்ஏக்களின்பதவியைபறிக்கவேண்டும்எனசபாதாயகரிடம் இபிஎஸ் தரப்பு முறையிட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த வித முடிவடையும் சபாநாயகர் எடுக்காமல் உள்ளார்.இந்த நிலையில் தான் தான் அதிமுக என நிரூபிக்கும் வகையில் ஜெயலலிதா பாணியில் அதிரடியாக நடவடிக்கை எடுத்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் முக்கியநிர்வாகிகளாகஉள்ளஎஸ்.பி.வேலுமணி,தங்கமணி,சி.வி.சண்முகம்,விஜயபாஸ்கர்,நத்தம் விஸ்வநாதன்,காமராஜ் உள்ளிட்ட 28 பேரின் மாவட்ட செயலாளர்களின் பதவியை இபிஎஸ் பறித்துள்ளார். மேலும் புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமித்து கெத்து காட்டியுள்ளார் இபிஎஸ்.அதிமுகவில்தொடர்ந்துகுழப்பம்ஏற்பட்டுவருவதால்அமைச்சரவையில்அதிமுகவினருக்கு வாய்ப்பு வழங்கினால் பிரச்சனை அதிகரிக்கும் என்ற காரணத்தால் முதலமைச்சர் விஜய்யும் அமைச்சரவையை விரிவாக்கம் செய்யாமல் அமைதி காப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இபிஎஸ்- சிவி சண்முகம் என இரு தரப்பும்எதிரும்புதிருமாகஉள்ளதையடுத்து பொதுக்குழுவை கூட்டுமாறுபொதுக்குழுஉறுப்பினர்களிடம்எஸ்.பி.வேலுமணி,சிவி.சண்முகம் தரப்புகையெழுத்தைவாங்கியுள்ளது.அதேநேரம்இபிஎஸ்தரப்போசமாதானபேச்சுவார்த்தைக்கு தூது விட்டுள்ளது. நேற்று இபிஎஸ் வெளியிட்டிருந்த அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகம், நம் கட்சிக்குள் குதிரை பேர வியாபாரம் நடத்தியும், பதவி ஆசை காட்டியும், ஒருசில நிர்வாகிகளை நம்மிடம் இருந்து பிரிக்க முற்பட்டது என்பது வேதனையான உண்மை. தமிழக வெற்றிக் கழகம் இப்போதைக்கு பொய்க்கால் குதிரை அரசு அமைத்துவிட்டது. நமக்கு வாக்களித்த மக்களையும், அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் கொடுத்த கழகத்தையும் நம்புங்கள். எல்லா கட்சிகளிலும் பிரச்சனைகள் உள்ளன.அதேபோல், நமது கட்சியிலும் பிரச்சனை இருப்பின் அதை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம்.ஐந்து கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சிலகாலம்தான். கழகத்தின் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய நம் இருபெரும் தலைவர்களின் புகழ் இருக்கும் வரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செழித்து வளரும் என குறிப்பிட்டிருந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டமானது இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.அப்போது தேர்தல் தோல்வியை தொடர்ந்து அதிமுகவிற்குள் ஏற்பட்டுள்ள குழப்பம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட பொதுக்குழு கூட்டம் கூட்டுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.