fbpx
Others

சர்ச்சைகளை உருவாக்கும் ‘ரீல்ஸ்’ தவெக அரசு முற்றுப்புள்ளி வைக்குமா. ?

எந்தக் கட்சி தலைமையிலான அரசுக்கும் ஏதோ ஒரு வகையில் பிரச்சினை வருவது வழக்கம்தான். ஆனால், தவெக அரசுக்கு வரும் பிரச்சினைகளில் பெரும்பான்மையானது ரீல்ஸ் மூலம்தான். ஆர்வக் கோளாறில் சில தவெக நிர்வாகிகள் எடுக்கும் ரீல்ஸ்கள்தமிழக சட்டசபை: எம்.எல்.ஏ.,வாக பதவியேற்றதற்கு தேர்தல் சான்றிதழ் இல்லாமல்  வந்த டி.வி.கே., அமைச்சர் கீர்த்தனா - தி இந்து சர்ச்சைகளில் சிக்குவது ஒருபுறம் இருக்க, அமைச்சர்களும் அவ்விதமே செயல்படுவது மக்களிடம் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.2026 சட்டப்பேரவைக் களத்தில் திமுக, அதிமுக கூட்டணிக் கட்சிகள் களத்தில் சுற்றி சுழன்று கொண்டிருந்த நேரத்தில், பக்காவாக சில பல ரீல்ஸ்களை தட்டிவிட்டு ஸ்மார்ட் பிரச்சாரம் செய்தனர் தவெகவினர். ரீல்ஸெல்லாம் மக்களிடம் எடுபடாது என ஆண்ட கட்சிகள் மிதப்பில் இருந்த நேரத்தில்தான், ஆட்சியையே தட்டி தூக்கி தெறிக்கவிட்டது தவெக. இப்படி விஜய்யின் வெற்றிக்கு மிகவும் கைகொடுத்த ரீல்ஸ், இப்போது விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறது.அமைச்சர் கீர்த்தனா சமீபத்தில் அரசுப் பள்ளி ஒன்றுக்கு சென்று, மாணவியிடம் ஆங்கிலத்தில் பேசச் சொல்லி நடந்துகொண்ட விதம் பெரும் சர்ச்சையாகி உள்ளது. அந்த மாணவியிடம் சகஜமாக பேசி, அவரின் பயத்தை போக்காமல், அதிகாரத்தோடு, மாணவியை கைகட்டி பதில் சொல்லவைத்த அமைச்சர் கீர்த்தனாவின் போக்கு விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அவரின் இத்தகைய செயல்பாட்டுக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அமைச்சர் கீர்த்தனா ஏற்கெனவே தொழில் முதலீடுகளை ஈர்க்க ரீல்ஸ் வெளியிட்டும் சலசலப்பில் சிக்கினார்.எல்லாவற்றுக்கும் மேலாக, அமைச்சர் சரத்குமார் தொடர்பான ஒரு வீடியோ தவெக அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியது. சரத்குமார் ஒரு கிரிக்கெட் போட்டியில் செல்போனில் ஏதோ ஒருவகை பவுடரை தூளாக்கும் ரீல்ஸ் வைரலானது. அதுஅரசு பள்ளி ஆய்வு சர்ச்சையில் அமைச்சர் கீர்த்தனா - தொடர் விமர்சனங்களை  எதிர்கொள்ளும் தவெக அரசு - BBC News தமிழ் போதைப்பொருள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தியது. மேலும், அவரின் இன்னும் சில ரீல்ஸ்களும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால், “என் குழந்தைக்கு மாத்திரை உடைத்தேன்” என சொல்லி ரீல்ஸ் மூலமே பதிலும் சொன்னார் அமைச்சர் சரத்குமார்.தவெக ஆட்சி அமைந்த புதிதில், அக்கட்சியின் நிர்வாகிகள் அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள், அலுவலகங்களில் புகுந்து ஆய்வு செய்து ‘ரீல்ஸ்’கள் வெளியிட்டது பெரும் சர்ச்சையானது. இதன்பின்னர், தவெக நிர்வாகிகள் யாரும் ஆய்வில் ஈடுபட கூடாது என அமைச்சர் ஆனந்த் அறிக்கை வெளியிட்டார். ஆனாலும் கூட இப்போது வரை தவெகவினரின் ஆய்வு ‘ரீல்ஸ்’கள் குறையவே இல்லை.சமீபத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்களில் புகுந்து கூட சில நிர்வாகிகள் ஆய்வு செய்து ரீல்ஸ் போட்டு சலசலப்பை உருவாக்கினார்கள். அதேபோல, அரசுப் பள்ளிகளில் புகுந்து மாணவர்களிடம் ஆய்வு செய்வது, முதல்வர் விஜய்யின் படத்தை மாட்டுவது என தொடர்ந்து வெளிவரும் ரீல்ஸ்கள் தவெகவின் பெயரை டேமேஜ் செய்துவருவது உண்மை.அமைச்சர் ஆன புதிதில் எந்த குவாரிக்கு சென்றாலும் ட்ரோன் கேமராக்களை பறக்கவிட்டு, ஆய்வு செய்யும் போது பின்னணிபாடல்களோடு‘ரீல்ஸ்’வெளியிட்டுவந்தகனிமவளத்துறைஅமைச்சர்இப்போதுகொஞ்சம்அமைதியாகியிருக்கிறார்.கோயில்களில் முறுக்கின் ‘தயாரிப்பு தேதியை’ கேட்டு தடதடக்கும் ‘ரீல்ஸ்’கள் எடுத்த அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷின் ரீல்ஸ்களும் குறைந்துள்ளன. இப்படி ‘ரீல்ஸ்’கள் தவெக ஆட்சிக்கு ஆபத்து கணைகளாக மாறுவதை உணர்ந்து சில அமைச்சர்கள் அமைதியானாலும், கீர்த்தனா போன்ற சில அமைச்சர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு ‘ரீல்ஸ்’களை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.‘கடந்த ஆட்சி சரியில்லை, அவர்களின் ஆட்சியில் நிர்வாகம் சரியில்லை, எல்லா துறைகளிலும் போதிய பணியிடங்கள் நிரப்பப்படவில்லை, எல்லா துறைகளிலும் ஊழல் நிரம்பி வழிந்தது’ என ஒருபக்கம்குற்றம்சாட்டும்தவெகஅரசு.அதேஆட்சியில்நிர்வகிக்கப்பட்டுவந்தஅரசுமருத்துவமனைகள்,பள்ளிகளில்,அலுவலகங்களில் ஒரே நாளில் மாற்றம் வந்துவிடும் என எதிர்பார்ப்பது சரியா?கடந்த ஆட்சிகளில் நடந்ததாக சொல்லும் சீர்கேடுகளை சரி செய்து, போதிய பணியாளர்களை நியமித்து அதன்பின்னர் ஆய்வுகளில் ஈடுபட்டால், அதில் நியாயம் உண்டு. அதனை விடுத்து இப்படி செய்யப்படும் ‘திடீர்’ ஆய்வு ரீல்ஸ்கள் விளம்பரத்துக்கு மட்டுமே உதவும்’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.தவெக அமைச்சர்கள், நிர்வாகிகளின் ரீல்ஸ்க்கு அதிகம் இலக்காவது அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், கோயில்கள் தான். ‘இதே அமைச்சர்கள், தவெக நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலகம், காவல் நிலையங்கள், தாலுகா அலுவலகங்கள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் புகுந்து ‘ரீல்ஸ்’ எடுக்க முடியுமா?’ என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.அரசு மருத்துமனைகளில் ரீல்ஸ்கள் இப்போது பெரும் இடையூறாக மாறியுள்ளதாக கண்டனங்கள் குவிகின்றன. இதற்கு உதாரணமாக ‘அரசியல் கட்சியினர் என்ற பெயரில் மருத்துவமனைக்குள் புகுந்து ரீல்ஸ் வீடியோ எடுப்பதை அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்’ என வலியுறுத்தி திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆய்வுகள் என்பதுவழக்கமானஒன்றுதான்,அதன்மூலமாகஉண்மைநிலையைகண்டறிந்துவிழிப்புணர்வையும், நம்பிக்கையையும் ஊட்டுவது நல்லதுதான். ஆனால், ரீல்ஸ்களுக்காகவே ஆய்வு செய்வது கண்டனங்களையே பெற்றுத் தரும்.எனவே, சர்ச்சைகளை உருவாக்கும் ‘ரீல்ஸ்’ புள்ளிகளுக்கு தவெக அரசு முற்றுப்புள்ளி வைக்குமா

Related Articles

Back to top button
Close
Close