ஓட்டுனர்கள் பணியின் போது கைபேசியை பயன்படுத்துவது முற்றிலுமாக தடை….
ஓட்டுநர்கள் மொபைல் போனை பயன்படுத்த கூடாது என்ற உத்தரவானது பல முறை அறிவுறுத்தப்பட்டும் தொடர்ந்து மொபைல் போன் பயன்படுத்தும் நிகழ்வானது நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக வீடியோ காட்சிகள் அவ்வப்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் பேருந்து ஓட்டுநர்கள் சட்டப்பையில் கூட மொபைல் போனை வைத்திருக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பேருந்து இயக்கத்தின் போது ஓட்டுநர்கள் கைபேசி வைத்திருக்க கூடாது மற்றும் உபயோகிப்படுத்த கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.இருப்பினும்ஒட்டுனர்கள்சட்டைப்பையில்கைபேசிவைத்திருப்பதாகவும் அவ்வப்போது பணியின் போது பயன்படுத்தி வருவதாகவும் பயணிகளிடமிருந்து தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டு வருகிறது.இவ்வாறு ஒட்டுனர்கள் பணியின் போது கைபேசியை பயன்படுத்தி வருவதால் அவ்வப்போது உயிர் இழப்பு மற்றும் ‘பெரிய விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.எனவே ஓட்டுனர்கள் பணியின் போது கைபேசியை சட்டைப்பையில் வைத்திருப்பது மற்றும் பயன்படுத்துவது முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது. மேலும் பேருந்து நிலையம் மற்றும் வழித்தட ஆய்வின் போது ஓட்டுனர்கள் கைபேசி வைத்திருப்பது, பயன்படுத்துவது
கண்டறியப்பட்டால் ஓட்டுனர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சுற்றறிக்கை வாயிலாக மீண்டும் நினைவூட்டப்படுவதாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது. அரசுபேருந்துகளில்நடத்துனர் விசிலில் TVKஎன்றுபயன்படுத்துகின்றனர்.அரசுஇதுகுறித்துஇம்மாதிரியான விசில்களைபயன்படுத்த தடைவிதிக்கவேண்டும். எனபொதுமக்களின்கருத்து..பேருந்தை ஒட்டிக்கொண்டே மொபைல் போனில் பேசுவது மட்டுமில்லாமல் ரீல்ஸ் பார்ப்பது போன்ற செயல்களிலும் ஓட்டுநர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் கவன குறைவு ஏற்பட்டு விபத்தானது நடைபெற்று வருகிறது.